இன்னும் அப்படியே இருக்கீங்களே – கருப்பு உடையில் கவர்ச்சி காட்டும் சாயிஷா

தமிழ் சினிமாவில் குறைவான அளவில் படங்கள் நடித்திருந்தாலும் கூட பெயரை சொன்னால் உடனே தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு தெரியக்கூடிய சில நடிகைகளில் சாயிஷாவும் ஒருவர்.

தனது தனிப்பட்ட நடனம் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தவர் சாயிஷா. வனமகன் திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தமிழில் சில படங்களில் நடிகையாக நடித்துள்ளார். பிறகு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துக்கொண்டார்.

பொதுவாக பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில்லை. ஆனால் சாயிஷா திருமணத்திற்கு பிறகும் கூட காப்பான், டெடி ஆகிய திரைப்படங்களில் நடித்தார். டெடி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது அதற்கு பிறகு சாய்ஷா நடித்து எந்த ஒரு படமும் வெளி வரவில்லை. இதனால் சாயிஷாவும் மற்ற நடிகைகள் போலவே திருமணம் ஆனதால் திரை வாழ்க்கையை விட்டு விலகி விட்டார் போல என பலரும் நினைத்து கொண்டிருந்தனர்.

அடிக்கடி இன்ஸ்டாவில் மட்டும் ஆக்டிவாக இருந்து வரும் சாயிஷா தற்சமயம் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்னமும் பழையப்படியே சாயிஷா இருக்கிறார் என்பது தெரிகிறது. அவரின் தோலின் வெள்ளை நிறத்திற்கு ஏற்றாற் போல கவர்ச்சியான கருப்பு உடையை அணிந்து இருப்பதால் இந்த புகைப்படம் பயங்கரமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Leave a Reply