என்னது இத்தனை லட்சம் வீவ்ஸ் போச்சா – வரவேற்பை பெரும் அண்ணாச்சி படம் 

தற்சமயம் இந்தியாவில் எங்கு சினிமா வந்தாலும் அதிகப்பட்சம் படத்தை பேன் இந்தியா திரைப்படமாகவே வெளியிட திட்டமிடுகின்றனர். கே.ஜி.எஃப் 2 மற்றும் ஆர்.ஆர்.ஆர் போன்ற திரைப்படங்கள் வெளியான பிறகு பலரும் பேன் இந்தியாவாக வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

Legend

தற்சமயம் விஷால் நடித்து வரும் லத்தி திரைப்படமும் பேன் இந்தியா ரீலிஸ் ஆக இருக்கும் நிலையில், சரவணா சில்க்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் நடிக்கும் லெஜண்ட் திரைப்படமும் பேன் இந்தியாவாக வெளியாக இருக்கிறது.

முதல் படம் என்றாலும் கூட படத்திற்கு அதிகமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார் சரவணன். இசை வெளியீட்டு விழாவிற்கும் கூட 6 கோடி அளவில் செலவு செய்து மணி ரத்னம், ராஜ மெளலி போன்ற முக்கிய பிரபலங்களை வரவழைத்திருந்தார் அருள் சரவணன்.

ஆனால் இந்த படம் மக்களிடையே எந்தளவிற்கு வரவேற்பை பெறும் என்கிற சந்தேகம் பலருக்கு இருந்து வந்தது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஆகியவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

லெஜண்ட் படத்தின் ட்ரைலர் 28 மில்லியன் பார்வைகளையும், மொசலோ மொசலு பாடல் 13 மில்லியன் பார்வைகளையும், வாடி வாசல் பாடல் 17 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளன.

எனவே இந்த படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Refresh