Connect with us

லியோ குழுவில் லெஜண்ட்! –  இது வேற மாதிரி சம்பவமா இருக்கும் போலயே!

Latest News

லியோ குழுவில் லெஜண்ட்! –  இது வேற மாதிரி சம்பவமா இருக்கும் போலயே!

Social Media Bar

தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து உருவாகும் அடுத்த படமாக லியோ இருக்கிறது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் விக்ரம் இரண்டு திரைப்படங்களிலையுமே பெரிய ஹீரோக்களை நடிக்க வைத்து பெரும் ஹிட் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

மன்சுர் அலி கான், கெளதம் மேனன் என பலரும் இந்த படத்தில் நடிக்க. தற்சமயம் கூடுதல் அப்டேட்டை வழங்கியுள்ளார் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் அதிபரான அருள் சரவணன். தற்சமயம் அவர் காஷ்மீரில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அருள் சரவணன்.

போன வருடம் இவர் லெஜண்ட் என்கிற படத்தை தயாரித்து நடித்தார். அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் லெஜண்ட் குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அருள் சரவணன் லியோ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என்றே கூற வேண்டும்.

லெஜண்ட் சரவணன் காஷ்மீர் வீடியோவை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top