சிறப்பான ஆக்‌ஷன் காட்சிகளோடு களம் இறங்கிய அருண் விஜய்.. ரெட்ட தல ட்ரைலர்..!

கடந்த சில காலங்களாகவே நடிகர் அருண் விஜய் தொடர்ந்து நல்ல கதை களங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது.

அதனை தொடர்ந்து அவர் நடித்த பெரும்பான்மையான திரைப்படங்கள் ஆக்‌ஷன் திரைப்படங்களாக இருந்தன. தடையறத் தாக்க, தடம் போன்ற அவரது திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்த நிலையில் இப்பொழுது வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக மாறி இருக்கிறார். இவரது திரைப்படங்கள் குறித்து மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்பொழுது அவர் நடித்திருக்கும் திரைப்படம் தான் ரெட்ட தல.

ரெட்ட தல திரைப்படத்தை க்ரிஸ் திருக்குமரன் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தை இசையமைத்திருக்கிறார் ஷாம் சி எஸ். இந்த நிலையில் சித்தி இதானி, தன்யா போன்ற நடிகைகள் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஆக்‌ஷன் கதைக்களத்தை கொண்ட படமாக இது தெரிகிறது முக்கியமான விஷயம் என்னவென்றால் ட்ரைலரின் பார்க்கும் பொழுது சண்டை காட்சிகள் வித்தியாசமானதாக இருக்கிறது. சண்டை காட்சிகள் பலவும் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கிறது இது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.