News
பீஸ்ட் படத்திற்கு கத்தாரில் தடை! ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் நடித்து வெளியாகவுள்ள பீஸ்ட் திரைப்படத்திற்கு கத்தாரில் தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் பீஸ்ட் வெளியாகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பீஸ்ட் வெளியாகும் நிலையில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பலரும் பீஸ்ட் படத்திற்கு ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.
படம் வெளியாக இரண்டு நாட்களே உள்ள நிலையில் கத்தாரில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக குவைத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கத்தாரிலும் தடை செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
