பாசில் ஜோசப்பின் அசத்தல் தமிழ் டப்பிங் படங்கள்: குருவாயூர் அம்பலநடையில் கதை.!

மலையாளத்தில் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் இருந்து வருபவர் பாசில் ஜோசப்.  அவரது நடிப்பில் தமிழ் டப்பிங்கில் வரும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பிரபலமான திரைப்படம்தான் குருவாயூர் அம்பலநடையில்.

இந்த திரைப்படம் கடந்த 16 மே 2024 இல் வெளியானது. 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 90 கோடிக்கு ஓடி பெரும் வெற்றியை கொடுத்தது.

இந்த படத்தில் பாசில் ஜோசப் மற்றும் பிரித்திவிராஜ், நிகிலா விமல் மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி பாசில் ஜோசப் துபாயில் ஒரு நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறார்.

அவரின் நன்னடத்தையை பார்த்து பிரித்திவிராஜ் தனது தங்கை அனஸ்வரா ராஜனை அவருக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். நிச்சயம் எல்லாம் நடந்த பிறகு தனது பழைய காதல் குறித்து தொடர்ந்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகிறார் பாசில் ஜோசப்.

நிகிலா விமலைதான் முன்பு காதலித்துள்ளார் பாசில் ஜோசப் அதன் பிறகு நிகிலா விமல் பிரித்திவிராஜை திருமணம் செய்துக்கொள்கிறார். எனவே தன்னுடைய பழைய காதலிதான் பிரித்திவிராஜின் மனைவி என்பதை அறியாமல் இருக்கிறார் பாசில் ஜோசப்.

இந்த விஷயம் பிரித்திவிராஜ்க்கு ஒரு கட்டத்தில் தெரிகிறது அதற்கு பிறகு எப்படி பாசில் ஜோசப்புக்கும் அனஸ்வராவிற்கும் திருமணம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாக இருக்கிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version