ஒரு ஸ்பை, ஒரு கொலைக்காரி.. எதிர்காலத்தை பார்க்கும் நாய்..! ஸ்பை பேமிலி தமிழ் டப்பிங்கில் வந்த அனிமே சீரிஸ்..

தொடர்ந்து தமிழில் ஜப்பான் அனிமே ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போல  அனிமே தொடர்களும் தொடர்ந்து வித்தியாசமான கதைகளத்தை கொண்டு வெளியாகி கொண்டே இருக்கின்றன.

அப்படியாக தமிழில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது ஸ்பை ஃபேமிலி அனிமே தொடர். இந்த தொடரின் கதைக்களம் மிக சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

ஜெர்மனியில் நடந்த உள்நாட்டு யுத்தத்தை அடிப்படையாக கொண்டு இதன் கதைக்களம் அமைந்துள்ளது. ஜெர்மனியில் Westalis மற்றும் Ostania ஆகிய இரு பகுதிகளுக்கு இடையே போர் நடப்பதற்கான சூழல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அதை தடுப்பதற்காக ட்வலைட் (Twilight) என்கிற பிரபலமான உளவாளிக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதாவது டொனாவன் டெஸ்மண்ட் என்கிற ஒரு பிரமுகர் இருக்கிறார். அவரோடு தொடர்பை ஏற்படுத்தி இந்த போரை நிறுத்த வேண்டும்.

ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது அது என்னவென்றால் டெஸ்மாண்டை வெளியில் எங்கேயும் சந்திக்க முடியாது. அவருடைய இரண்டு மகன்களும் பணக்காரர்கள் மட்டுமே படிக்கும் ஒரு தனியார் பள்ளியில் மட்டுமே சந்திக்க முடியும்.

எனவே டிவலைட் தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கி தனது குழந்தையை பள்ளியில் சேர்க்க வேண்டும். அதன் மூலம் டெஸ்மாண்டை தொடர்பு கொள்ள முடியும்.

இதற்காக அனாதை விடுதியில் இருந்து ஆன்யா என்கிற சிறுமியை தந்தெடுக்கிறான் ட்வலைட். ஆன்யாவிற்கு சிறு வயதில் நடந்த ஆய்வின் காரணமாக யார் மனதில் என்ன நினைத்தாலும் அது கேட்கும்.

அதே போல மனைவியாக ப்ரியர் என்கிற பெண்ணை திருமணம் செய்கிறான். ஆனால் அவள் காசுக்காக கொலை செய்யும் கொலைக்காரியாக இருக்கிறாள். அவள் கொலைக்காரி என்பது ட்வலைட்டுக்கு தெரியாது. அதே போல ட்வைலைட் உளவாளி என்பது ப்ரியருக்கு தெரியாது.

இதற்கு நடுவே அவர்கள் ஒரு நாயை வாங்குகின்றனர். அதனால் எதிர்காலத்தை பார்க்க முடியும். ஆனால் சிறுமி ஆன்யாவால் மனதில் உள்ளதை எல்லாம் படிக்க முடியும் என்பதால் ட்வைலைட், ப்ரயர் மற்றும் அந்த நாய் குறித்த அனைத்து ரகசியங்களும் அவளுக்கு தெரிகின்றன.

இதனை தொடர்ந்து இந்த குடும்பம் செய்யும் விஷயங்களே கதையாக இருக்கிறது. தற்சமயம் இந்த சீரிஸிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றன.