அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமர்சியல் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இப்பொழுது எல்லாம் பெரிதாக இவர் காமெடி கதைக்களங்களை தேர்ந்தெடுப்பது இல்லை என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் பராசக்தி.
இந்த திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி வருவதாக தற்சமயம் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன..
மற்ற மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகர்களுக்கு கேமியோ கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனோடு சேர்ந்து மலையாளத்தில் பிரபல நடிகரான பாசில் ஜோசப் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் ரானா டகுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் நடந்த அதே சமயத்தில் கர்நாடகா கேரளா போன்ற மாநிலங்களிலும் நடந்தது.
அந்த சமயங்களில் அங்கு போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய போராட்ட வீரர்களாக பாசில் ஜோசப்பும் ராணா டகுபதியும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் பாசில் ஜோசப் நடிக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இப்போது நிலவி வருகிறது. அதற்கு தகுந்தாற் போல இவரும் வித விதமான கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களாகதான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பொன்மான் திரைப்படம் கூட ஓ.டி.டி வழியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் பாசில் ஜோசப் நடிப்பில் சோனி லிவ் ஓ.டி.டியில் வெளியான திரைப்படம் தான் Pravinkoodu Shappu.
இந்த திரைப்படத்தில் போலீஸ் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார் பாசில் ஜோசப்.படத்தின் கதைப்படி திருச்சூருக்கு பதவி ஏற்று வரும் போலீஸ் அதிகாரியாக பாசில் ஜோசப் இருக்கிறார். அவர் இதற்கு முன்பு 14 குற்றங்களில் குற்றவாளியை கண்டறிந்தவர்.
மற்ற போலீஸ் மாதிரி ஆட்களை பிடித்து அடிக்காமல் துப்பறியும் முறையிலேயே இவர் குற்றவாளியை கண்டறிவார். இந்த நிலையில் வேலைக்கு வந்த முதல் நாளே ஒரு கொலை குற்றத்தை விசாரிக்கும் பணி இவருக்கு வருகிறது.
டோடி ஷாப் எனப்படும் கள்ளு கடையில் அதன் உரிமையாளரான கொம்பன் பாபு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் சிலர் அந்த கடையில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த கொலையை யார் செய்தார் என்பதை கதாநாயகன் கண்டறிவதே கதையாக இருக்கிறது.
விறு விறுப்பை தூண்டும் இந்த கதைக்கு இப்போது வரவேற்புகள் அதிகரித்து வருகிறது.
தற்சமயம் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பாசில் ஜோசப்பை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்த அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் தமிழ் சினிமாவிலும் பாசில் ஜோசப்புக்கு வாய்ப்புகள் வரத் துவங்கியிருக்கின்றன.
தமிழிலும் நிறைய பேர் அவரை பேட்டி எடுக்க துவங்கியிருக்கின்றனர். இப்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாசில் ஜோசப் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது நான் அப்பொழுது ஒரு பெண்ணை காதலித்து வந்தேன்.
நான் சினிமாவுக்கு செல்வது குறித்து அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவரிடம் நான் கூறும் பொழுது சினிமாவில் ஒரு வேலை நான் தோல்வி அடைந்து விட்டால் எனது மேனேஜர் எனக்கு மீண்டும் அதே வேலையை தருவதாக கூறினார் என்று எனது காதலியிடம் கூறினேன்.
ஆனால் உண்மையில் அந்த மேனேஜர் அப்படியெல்லாம் கூறவில்லை அதேபோல சினிமாவில் நான் வளரும் காலங்களில் எனக்கு செலவுகளுக்கு எனது நண்பர்களும் எனது காதலியும் தான் பணம் கொடுத்து உதவினார்கள் என்று அந்த விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் பாசில் ஜோசப்.
மலையாளத்தில் தற்சமயம் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவராக பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பொதுவாக கதாநாயகனுக்கு என சொல்லப்படும் உயரமான தோற்றம் மாதிரியான விஷயங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட பாசில் ஜோசப் அவருக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
இவரின் இயல்பான நடிப்புக்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தமிழ் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார் பாசில் ஜோசப்.
அதில் அவர் கூறும்போது சினிமாவிற்கு வருவதற்கான உத்வேகத்தை எனக்கு தமிழ் திரைப்படங்கள்தான் கொடுத்தன. நான் சினிமாவுக்கு வர நினைத்த சம காலத்தில்தான் தமிழ் சினிமாவில் ஜிகர்தண்டா, முண்டாசுபட்டி, பண்ணையாரும் பத்மினியும் போற படங்கள் எல்லாம் வந்தன.
அவற்றை பார்த்தப்போது எனக்கும் சினிமாவில் சாதிக்க ஆசை வந்தது. அதே போல எனக்கு கமல் சார் படங்கள் மணிரத்தினம் படங்கள் எல்லாம் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார் பாசில் ஜோசப்.
நடிகர் பாசில் ஜோசப் தற்சமயம் மலையாள சினிமாவில் மிக பிரபலமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார். தமிழ் சினிமாவிலும் கூட நடிகர் பாசில் ஜோசப்பிற்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வந்து ட்ரெண்ட் ஆன திரைப்படம்தான் பொன்மான். ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாசில் ஜோசப் இப்போது வரிசையாக கதாநாயகனாக நடித்து வருகிறார்.
கேரளாவில் இருக்கும் வரதட்சணை பிரச்சனையை பேசும் வகையில் பொன்மான் திரைப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் கதைப்படி பாசில் ஜோசப் ஒரு வித்தியாசமான வேலையை செய்து வருகிறார்.
அதாவது திருமணம் செய்வதற்கு தேவையான நகை வாங்க காசு இல்லாமல் பலர் இருப்பார்கள். அவர்களுக்கு அந்த நகையை திருமணத்திற்கு முன்பே கொடுக்கிறார் பாசில் ஜோசப். ஆனால் அதற்கு பதிலாக மறுநாள் வரும் மொய் தொகை மூலமாக நகைக்கான தொகையை அந்த குடும்பம் கொடுத்துவிட வேண்டும்.
கொடுக்காத பட்சத்தில் பாசில் ஜோசப் அந்த நகையை திரும்ப பெற்று சென்றுவிடுவார். இந்த நிலையில் இதே மாதிரி ஒரு திருமணத்திற்கு நகையை கொடுக்க செல்கிறார் பாசில் ஜோசப்.
ஆனால் அந்த குடும்பமே சேர்ந்து பாசில் ஜோசப்பை ஏமாற்ற பார்க்கிறது. இந்த நிலையில் அவர் எப்படி நகையை வாங்க போகிறார் என்பதாக படத்தின் கதை செல்கிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்கள் இருப்பது போலவே மலையாளத்திலும் முக்கியமான நடிகராக பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பாசில் ஜோசப் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார்.
ஆனால் அவரது தனிப்பட்ட நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் தற்சமயம் கதாநாயகனாகவும் நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாசில் ஜோசப் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து பேசியிருந்தார்.
அதில் அவர் கூறும்போது, என்னுடைய குடும்பம் வழக்கமான ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம்தான் என்பதால் சினிமா குறித்து அவர்களுக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
ஆனால் எனக்கு சினிமாவின் மீதுதான் அதிக ஆசை இருந்தது. சினிமாவை பொறுத்தவரை கதாநாயகனாக ஆவதற்கான எந்த ஒரு அம்சமும் எனக்கு இல்லை. குறைவான உயரம்தான் எனக்கு இருந்தது. எனவே நடிப்பின் மூலம்தான் மக்கள் மத்தியில் என்னை தனியாக காட்ட முடியும் என நினைத்தேன்.
ஒரு கதாநாயகனுக்கு சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் இருப்பதை விடவும் இதுதான் முக்கியம் என நினைத்தேன் என கூறியுள்ளார் பாசில் ஜோசப்.
மலையாளத்தில் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் இருந்து வருபவர் பாசில் ஜோசப். அவரது நடிப்பில் தமிழ் டப்பிங்கில் வரும் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பிரபலமான திரைப்படம்தான் குருவாயூர் அம்பலநடையில்.
இந்த திரைப்படம் கடந்த 16 மே 2024 இல் வெளியானது. 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 90 கோடிக்கு ஓடி பெரும் வெற்றியை கொடுத்தது.
இந்த படத்தில் பாசில் ஜோசப் மற்றும் பிரித்திவிராஜ், நிகிலா விமல் மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். படத்தின் கதைப்படி பாசில் ஜோசப் துபாயில் ஒரு நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறார்.
அவரின் நன்னடத்தையை பார்த்து பிரித்திவிராஜ் தனது தங்கை அனஸ்வரா ராஜனை அவருக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். நிச்சயம் எல்லாம் நடந்த பிறகு தனது பழைய காதல் குறித்து தொடர்ந்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகிறார் பாசில் ஜோசப்.
நிகிலா விமலைதான் முன்பு காதலித்துள்ளார் பாசில் ஜோசப் அதன் பிறகு நிகிலா விமல் பிரித்திவிராஜை திருமணம் செய்துக்கொள்கிறார். எனவே தன்னுடைய பழைய காதலிதான் பிரித்திவிராஜின் மனைவி என்பதை அறியாமல் இருக்கிறார் பாசில் ஜோசப்.
இந்த விஷயம் பிரித்திவிராஜ்க்கு ஒரு கட்டத்தில் தெரிகிறது அதற்கு பிறகு எப்படி பாசில் ஜோசப்புக்கும் அனஸ்வராவிற்கும் திருமணம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாக இருக்கிறது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips