அதெல்லாம் தெரிஞ்சுதான் சினிமாவுக்கு வந்தேன்.. ஹீரோவுக்கு எனக்கு தகுதியில்லை.. ஓப்பன் டாக் கொடுத்த பாசில் ஜோசப்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்கள் இருப்பது போலவே மலையாளத்திலும் முக்கியமான நடிகராக பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பாசில் ஜோசப் ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார்.

ஆனால் அவரது தனிப்பட்ட நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் தற்சமயம் கதாநாயகனாகவும் நடிக்க துவங்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாசில் ஜோசப் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும்போது, என்னுடைய குடும்பம் வழக்கமான ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம்தான் என்பதால் சினிமா குறித்து அவர்களுக்கு பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால் எனக்கு சினிமாவின் மீதுதான் அதிக ஆசை இருந்தது. சினிமாவை பொறுத்தவரை கதாநாயகனாக ஆவதற்கான எந்த ஒரு அம்சமும் எனக்கு இல்லை. குறைவான உயரம்தான் எனக்கு இருந்தது. எனவே நடிப்பின் மூலம்தான் மக்கள் மத்தியில் என்னை தனியாக காட்ட முடியும் என நினைத்தேன்.

ஒரு கதாநாயகனுக்கு சிக்ஸ் பேக்ஸ் எல்லாம் இருப்பதை விடவும் இதுதான் முக்கியம் என நினைத்தேன் என கூறியுள்ளார் பாசில் ஜோசப்.