இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். உளவு துறையை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இதில் இந்தியாவிற்கு உளவாளியாக பணிப்புரியும் சர்தார் வில்லனின் துரோக செயலால் பல வருடங்கள் ஜெயிலில் மாட்டி கொள்வார்.
இந்த நிலையில் சர்தாரின் மகன் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர இருக்கும் தண்ணீர் குழாய் திட்டம் குறித்து ஆய்வு செய்வார். அப்போதுதான் தனது தந்தையை பற்றி அவருக்கு தெரியும்.
இப்படியாக முதல் பாகத்தின் கதை இருக்கும். இந்த நிலையில் தற்சமயம் சர்தார் 2 திரைப்படத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதன் ஆரம்ப காட்சிகளே சீனாவில் துவங்குகிறது. வில்லனாக எஸ்.ஜே சூர்யா இந்த படத்தில் இருக்கிறார்.
உலகம் முழுக்க இருக்கும் உளவாளிகள் தேடும் ஒரு நபராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். எனவே சர்தார் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த கதை இருக்கும் என கூறப்படுகிறது.
கதைப்படி இந்தியாவிற்கு அந்த தண்ணீர் குழாய் திட்டத்தை கொண்டு வர நினைத்ததே இந்த எஸ்.ஜே சூர்யாவின் நிறுவனம்தான். அதை தடுத்த சர்தார் எஸ்.ஜே சூர்யாவையே தேடி செல்கிறார். அதை வைத்து இரண்டாம் பாகத்தின் கதை அம்சம் அமைந்துள்ளது.
ஆனால் இந்த படத்தில் அப்பா மகன் என இருவருமே உளவாளியாக இருக்கின்றனர் என ஒரு பேச்சு இருந்து வருகிறது.