Tag Archives: சர்தார் 2

சர்தார் 2 திரைப்படத்தின் கதை இதுதான்… கண்டறிந்த ரசிகர்கள்..!

இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். உளவு துறையை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இதில் இந்தியாவிற்கு உளவாளியாக பணிப்புரியும் சர்தார் வில்லனின் துரோக செயலால் பல வருடங்கள் ஜெயிலில் மாட்டி கொள்வார்.

இந்த நிலையில் சர்தாரின் மகன் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர இருக்கும் தண்ணீர் குழாய் திட்டம் குறித்து ஆய்வு செய்வார். அப்போதுதான் தனது தந்தையை பற்றி அவருக்கு தெரியும்.

இப்படியாக முதல் பாகத்தின் கதை இருக்கும். இந்த நிலையில் தற்சமயம் சர்தார் 2 திரைப்படத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதன் ஆரம்ப காட்சிகளே சீனாவில் துவங்குகிறது. வில்லனாக எஸ்.ஜே சூர்யா இந்த படத்தில் இருக்கிறார்.

உலகம் முழுக்க இருக்கும் உளவாளிகள் தேடும் ஒரு நபராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். எனவே சர்தார் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த கதை இருக்கும் என கூறப்படுகிறது.

கதைப்படி இந்தியாவிற்கு அந்த தண்ணீர் குழாய் திட்டத்தை கொண்டு வர நினைத்ததே இந்த எஸ்.ஜே சூர்யாவின் நிறுவனம்தான். அதை தடுத்த சர்தார் எஸ்.ஜே சூர்யாவையே தேடி செல்கிறார். அதை வைத்து இரண்டாம் பாகத்தின் கதை அம்சம் அமைந்துள்ளது.

ஆனால் இந்த படத்தில் அப்பா மகன் என இருவருமே உளவாளியாக இருக்கின்றனர் என ஒரு பேச்சு இருந்து வருகிறது.

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் சர்தார்.. அரை டசன் விமானங்களை இறக்கிய படக்குழு..!

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்தார். கார்த்தி நடித்த இந்த திரைப்படமும் வெளியான பொழுது நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

இதனை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்சமயம் இயக்கி வருகிறார். போன திரைப்படத்தில் ஒரு கார்த்தி மட்டும் உளவாளியாக இருப்பதாக கதை இருந்தது.

ஆனால் இந்த பாகத்தில் இரண்டு கார்த்தியும் உளவாளியாக வேலை பார்ப்பதாக கதை இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சர்தார் 2:

அதாவது உலக அளவில் நடக்கும் ஒரு மோசடியை இவர்கள் இருவரும் கண்டறிவது கதையாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு தகுந்தார் போல படப்பிடிப்புகளும் ரொம்ப பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட ஆறு விமானங்களை இந்த படப்பிடிப்பிற்காக பயன்படுத்தி வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. எனவே இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது.

சர்தார் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து… உயிரிழந்த ஸ்டண்ட் மேன்.. தமிழ் சினிமாவில் தொடரும் அநீதி!..

கடந்த 2022 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் சர்தார். அதன் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு அப்பொழுதே திட்டமிட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து தற்சமயம் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் படத்தின் இயக்குனரான பி.எஸ் மித்ரன். இந்த திரைப்படத்திலும் கார்த்தி இரண்டு வேடங்களில் வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்திலும் ராஷி கண்ணா முனிஷ்காந்த் போன்ற முதல் பாகத்தில் இருந்த பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். தற்சமயம் இரண்டாம் பாகத்தின் பூஜை கடந்த வாரம் நடந்த நிலையில் படத்தின் சண்டைக் காட்சிகளை படம்பிடிக்க துவங்கியிருக்கின்றனர்.

படப்பிடிப்பில் நடந்த விபத்து:

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. அப்பொழுது எந்தவித உபகரணங்களும் இன்றி சண்டை பயிற்சியில் ஈடுபட்ட சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கிறார்.

அவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது மேலிருந்து கீழே விழுந்ததில் மார்பு பகுதியில் அடிபட்டு நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் ஏழுமலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் சண்டை பயிற்சியாளர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்காமல் படபிடிப்புகளை நடத்தி வரும் அநீதி நடந்து வருகிறது. இந்த நிலையில் பெரும் நடிகர்கள் என்றால் இப்படி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் படபிடிப்பை நடத்தி இருப்பார்களா என்று மக்கள் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.