Tag Archives: PS mithran

சர்தார் 2 திரைப்படத்தின் கதை இதுதான்… கண்டறிந்த ரசிகர்கள்..!

இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். உளவு துறையை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றது. இதில் இந்தியாவிற்கு உளவாளியாக பணிப்புரியும் சர்தார் வில்லனின் துரோக செயலால் பல வருடங்கள் ஜெயிலில் மாட்டி கொள்வார்.

இந்த நிலையில் சர்தாரின் மகன் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வர இருக்கும் தண்ணீர் குழாய் திட்டம் குறித்து ஆய்வு செய்வார். அப்போதுதான் தனது தந்தையை பற்றி அவருக்கு தெரியும்.

இப்படியாக முதல் பாகத்தின் கதை இருக்கும். இந்த நிலையில் தற்சமயம் சர்தார் 2 திரைப்படத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதன் ஆரம்ப காட்சிகளே சீனாவில் துவங்குகிறது. வில்லனாக எஸ்.ஜே சூர்யா இந்த படத்தில் இருக்கிறார்.

உலகம் முழுக்க இருக்கும் உளவாளிகள் தேடும் ஒரு நபராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். எனவே சர்தார் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த கதை இருக்கும் என கூறப்படுகிறது.

கதைப்படி இந்தியாவிற்கு அந்த தண்ணீர் குழாய் திட்டத்தை கொண்டு வர நினைத்ததே இந்த எஸ்.ஜே சூர்யாவின் நிறுவனம்தான். அதை தடுத்த சர்தார் எஸ்.ஜே சூர்யாவையே தேடி செல்கிறார். அதை வைத்து இரண்டாம் பாகத்தின் கதை அம்சம் அமைந்துள்ளது.

ஆனால் இந்த படத்தில் அப்பா மகன் என இருவருமே உளவாளியாக இருக்கின்றனர் என ஒரு பேச்சு இருந்து வருகிறது.

லாரன்ஸை நம்பி கடைசியில் மோசம் போன இயக்குனர்!.. மீண்டும் உதவி இயக்குனர்தானா?..

Director Lokesh kanagaraj: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு இயக்குனராக இருந்து வருகிறார். அவர் இயக்கும் திரைப்படங்கள் பலவும் பெரும் வெற்றியை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் அவரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த இயக்குனர் ரத்னகுமார் தனியாக படமெடுக்க இருந்தார்.

ரத்னக்குமார் லோகேஷ் கனகராஜின் நண்பராவார். லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் இயக்க துவங்கிய நாள் முதலே அவரோடு பணிப்புரிந்து வருகிறார் ரத்னக்குமார். இது இல்லாமல் மேயாத மான், ஆடை மாதிரியான ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். தற்சமயம் மற்றொரு திரைப்படத்தை இயக்கவிருந்தார்.

இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. லியோ படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்தை விமர்சித்து ரத்னகுமார் பேசியதாக ஒரு தகவல் உண்டு.

ராகவா லாரன்ஸ் ரஜினிகாந்தின் பெரும் விசிறி என்பதால் இதனால் அதிருப்தி அடைந்தவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தற்சமயம் வேறு கதாநாயகனை தேடி வருகிறாராம் ரத்ன குமார்.

அதே சமயம் இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திற்கான திரைக்கதை வேலைகள் ஒருப்பக்கம் சென்றுக்கொண்டுள்ளன. இதில் சர்தார் 2 படத்தின் திரைக்கதையை கேள்விப்பட்ட ரத்னக்குமார் அதில் உதவி இயக்குனராக பணிப்புரிய விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

இதனையடுத்து இயக்குனர் பி.எஸ் மித்ரன் அவருக்கு சர்தார் 2 திரைப்படத்தில் வாய்ப்புகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

உண்மையில் பணக்காரந்தான் ஈஸியா ஏமாறுவான்!.. வச்சி செய்த சர்தார் இயக்குனர்!..

தமிழில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பி.எஸ் மித்ரன். உலக அரசியலில் மக்களுக்கு எதிராக நடக்கும் பல விஷயங்களை வெளிப்படுத்தி படம் எடுக்க கூடியவர் பி.எஸ் மித்ரன்.

அவர் இயக்கிய ஹீரோ, இரும்பு திரை, சர்தார் என அனைத்து திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் படங்களாகவே இருந்தன. சர்தார் படம் வெளியான பிறகு பல மக்கள் ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை தவிர்ப்பதை சமூகத்தில் பார்க்க முடிந்தது.

அடிக்கடி அவர் தனது பேட்டியில் பல விஷயங்களை பேசுவதை பார்க்க முடியும். அப்படி ஒரு பேட்டியில் பேசும்போது கார்ப்பரேட் அரசியல் குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது ரோல்ஸ் ராய்ஸ், ரோலக்ஸ் மாதிரியான நிறுவனங்கள் எப்போதுமே பணக்காரர்களுக்காகதான் பொருட்களை விற்கின்றன.

அவர்கள் விற்கும் எந்த பொருளையும் பாமர மக்களால் வாங்க முடியாது. அதுதான் அந்த நிறுவனத்தின் ஏமாற்று வேலையே. பணக்கார நிறுவனங்கள் பணக்காரர்களை ஏமாற்றியே பொருட்களை விற்கின்றன. அந்த நிறுவனத்தின் பெயருக்காக பணக்காரர்களும் அதை அதிக காசு கொடுத்து வாங்குகின்றனர்.

உண்மையில் பணக்காரர்கள்தான் எளிதில் ஏமாறுகிறார்கள். அதனால்தான் முதலில் ஃபில்டர் வாட்டர் என கொண்டு வரும்போது அதை பணக்காரர்களிடம்தான் அறிமுகப்படுத்தினார்கள். பணக்காரர்களும் உடனே அதை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

ஆனால் ஏழைகளிடம் அதை எளிதாக கொண்டு செல்ல முடியாது. எனவேதான் அவர்களிடம் தண்ணீர் பயத்தை உருவாக்கினார்கள். அவர்கள் காலம் காலமாக குடிக்கும் தண்ணீர் அசுத்தமானது என்கிற பயத்தை உண்டாக்கிதான் பாமர மக்களிடம் தண்ணீரை விற்பனை செய்தார்கள் என தண்ணீர் அரசியல் குறித்து பி.எஸ் மித்ரன் தனது பேட்டியில் கூறியிருந்தார்.

சர்தார் பட இயக்குனர் மித்ரனுக்கு கல்யாணம்! – வாழ்த்திய பிரபலங்கள்

தமிழில் தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் பி.எஸ் மித்ரன். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகும்.

இதற்கு முன்பு இவர் இயக்கிய இரும்புதிரை படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. தொழில்நுட்பம் மூலமாக நடக்கும் ஊழலை வெளிக்கொணரும் வகையில் இந்த படம் அமைந்திருந்தது. அதன் பிறகு வெளிவந்த ஹீரோ திரைப்படம் உலகில் கண்டுபிடிப்புகளுக்கு எதிராக நடக்கும் அரசியலை பேசியது.

தற்சமயம் இவர் இயக்கத்தில் வெளிவந்த சர்தார் திரைப்படமும் உலக அளவில் உள்ள தண்ணீர் அரசியலை பேசும் படமாக இருந்தது. இப்படி இவர் இயக்குகிற ஒவ்வொரு திரைப்படமும் உலக அளவில் நடக்கும் பெரும் அரசியலை பேசுவதால் அவை தொடர்ந்து ஹிட் அடித்து வருகின்றன.

அடுத்ததாக சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் பி.எஸ் மித்ரன். இந்நிலையில் அவரது காதலியான ஆஷாமீரா ஐயப்பன் என்கிற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் தஞ்சாவூரில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது.

இந்த நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சர்தார் படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? –  கெத்து காட்டும் சர்தார்..!

வித்தியாசமான கதைகளத்தை கொண்டு திரைப்படம் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் பி.எஸ் மித்ரன். இவர் இயக்கிய இரும்புதிரை, ஹீரோ ஆகிய திரைப்படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

தற்சமயம் இவரது இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம்தான் சர்தார். சர்தார் திரைப்படம் ட்ரைலர் வந்தது முதலே பல எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது. 

இந்நிலையில் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் மற்றும் விருமன் ஆகிய இரு திரைப்படங்களுமே அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.

தற்சமயம் சர்தார் திரைப்படமும் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் 40 கோடி என கூறப்படுகிறது. ஆனால் 11 நாளில் படம் 85 கோடி வசூல் செய்துள்ளது. 

100 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை விட சர்தார் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்தார்ல சொன்ன மாதிரி ஒரு ஜீன்ஸ் தயாரிக்க பல லிட்டர் தண்ணீர் செலவாகுது – ஒப்புக்கொண்ட ஜீன்ஸ் நிறுவனம்

சர்தார் படம் வெளியாகி ஐந்தே நாளில் 50 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

தண்ணீருக்காகதான் மூன்றாவது உலக போர் நடக்கும் என்ற ஒரு கருத்து பலரிடமும் இருந்து வருகிறது. மனித சமுதாயம் உருவான காலம் முதல் அது ஒரே குடையின் கீழ் வாழவும், விவசாயம் செய்யவும் நீர் இன்றியமையாததாக இருந்துள்ளது.

அந்த நீரை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கைப்பற்றும்போது மனித வாழ்க்கை என்னவாக இருக்கும் என்பதை விளக்கும் வகையில் சர்தார் படம் இருப்பதாக கூறப்படுகிறது.

சர்தார் படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரன் பேட்டி ஒன்றில் கூறும்போது ஜீன்ஸ் பேண்டில் துவங்கி நாம் பயன்படுத்தும் பல பொருட்களை உருவாக்க பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது என கூறியுள்ளார். இது பொய் என ஒரு சாரார் கூறி வந்தனர்.

டெர்பி ஜீன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் கபூரும் இந்த கருத்துக்கு ஒத்து போகிறார். தற்சமயம் அவரது நிறுவனத்தில் தண்ணீரே பயன்படுத்தாமல் ஜீன்ஸ் தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளார். அப்படி தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் உடையை தீபாவளிக்கு விற்பனை செய்துள்ளார்.

எங்களுக்கு எண்டே கிடையாது – அடுத்த படத்திற்கு தயாராகும் சர்தார் குழு

தீபாவளியை முன்னிட்டு திரையில் வெளியான திரைப்படங்கள்தான் சர்தார் மற்றும் பிரின்ஸ். பிரின்ஸ் திரைப்படம் நினைத்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. ஆனால் சர்தார் திரைப்படம் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.

படத்தின் வெற்றியை முன்னிட்டு ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அதில் பேசிய கார்த்தி தனது சினிமா வாழ்க்கையில் சர்தார் மிக முக்கியமான திரைப்படம் என கூறியுள்ளார். கடந்த 5 நாட்களில் மட்டும் படம் 50 கோடி வசூல் செய்துள்ளது. படத்தின் ஓ.டி.டி ரிலீஸை அமேசான், நெட்ப்ளிக்ஸ் இரண்டிற்குமே விற்பனை செய்துள்ளனர்.

இதையடுத்து சர்தாரின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அதிகார பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தில் ஒரு கார்த்தி உளவாளியாகவும், ஒரு கார்த்தி போலீஸாகவும் இருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இரண்டாம் பாகத்தில் இரண்டு கார்த்தியுமே உளவாளியாக இருக்க போவதாக கூறப்படுகிறது. நடிகர் கார்த்தியின் படங்களிலேயே 5 நாட்களில் அதிக வசூல் செய்த படமாக சர்தார் உள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வு தரணும்னு எனக்கு எண்ணம் கிடையாது – சர்தார் குறித்து பேசிய இயக்குனர்

இயக்குனர் பி.எஸ் மித்ரன் என்றாலே வித்தியாசமான கதைகளை படமாக்க கூடியவர் என்று ஒரு பிம்பம் உண்டு. அவர் படமாக்கிய இரும்பு திரை, ஹீரோ இரண்டுமே வித்தியாசமான கதைகளை கொண்ட ஒரு திரைப்படமாகும். இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

எப்போதும் பி.எஸ் மித்ரன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைப்படங்களை இயக்குபவர் என்ற பெயர் உண்டு. 

தற்சமயம் சர்தார் படத்திற்காக பேட்டி ஒன்றில் பேசினார் பி.எஸ் மித்ரன். அப்போது அவரிடம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உங்கள் படங்கள் இருக்கிறதே? என கேட்டனர்.

அதற்கு பதிலளித்த மித்ரன் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் இன்னொரு பக்கம் இருக்கும். 

அதை படமாக்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் படமாக்குகிறேன் என கூறியிருந்தார்.