இதெல்லாம் நியாயமே இல்ல.. அவசரப்பட்டுட்டாங்க..! – பீஸ்ட் ஓடிடி ரிலீஸால் புலம்பும் ரசிகர்கள்!
விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் உருவான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியானது முதலே கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. அதேசமயம் கேஜிஎஃப் 2ம் பாகமும் வெளியானதால் இரு படங்களுக்கு இடையே போட்டி நிலவத் தொடங்கியது.
அடுத்தடுத்த நாட்களில் கேஜிஎஃப் 2ன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எகிற தொடங்க பீஸ்ட் எதிர்பார்த்ததை விட குறைவாக ஓடியுள்ளது. எனினும் இது தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாகவே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் மே 11ம் தேதி சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது விஜய் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியாக வந்த கேஜிஎஃப் 2 இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பீஸ்ட் ஓடிடியில் அவசரப்பட்டு வெளியிடப்படுவதாக அவர்கள் ஆதங்கங்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக விஜய் நடித்து வெளியான மாஸ்டர் படமும் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.