என் சமூகத்துக்காகதான் இங்கே வந்தேன் – பிக் பாஸில் கண்ணீர் விட்ட ஷிவின்

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்சமயம் ஆறாவது சீசன் நடந்து வருகிறது. 

இந்த வாரம் பிக் பாஸில் எலிமினேசன் நாமினேசனில் உள்ளவர்களுக்கு ஒவ்வொருவரும் தங்களது கதையை சொல்ல வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதன்படி நேற்றுமுதல் ஒவ்வொருவரும் தங்களின் கதைகளை கூறி வருகின்றனர். இன்று சிவின் தனது கதையை கூறினார். சிவின் ஒரு திருநங்கை ஆவார். இதுவரை வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே முதல் முறையாக வந்திருக்கும் திருநங்கை போட்டியாளராக சிவின் இருக்கிறார். 

அவர் தனது கதையை கூறும்போது பொது சமூகத்தில் திருநங்கை பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்காதது குறித்து பேசினார். அவர் இந்தியாவில் இருந்தால் பிச்சை எடுக்கும் தொழிலுக்குதான் செல்ல வேண்டும் என அவரது தாயார் அவரை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பியதாக கூறினார். ஆனால் தனது தாயை பிரிந்து இருக்க முடியாது என்பதால் திரும்ப இந்தியாவிற்கே வந்துவிட்டார் சிவின். 

இந்த நிலையில் தனது சமூகத்திற்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே முக்கியமாக அவர் பிக் பாஸில் கலந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

Refresh