பிக் பாஸ் வீட்டில் தலைவர் போட்டி – ஜனனியுடன் போட்டியிடும் ஜிபி முத்து

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே மிகவும் பரபரப்பாகவே சென்றுக்கொண்டுள்ளது. ஒரு வாரம் முடிந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் யார் தலைவராக இருக்கலாம் என்பதற்கான போட்டியை துவங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் ஜெயிப்பவர்கள் வீட்டின் தலைமை பொறுப்பை ஏற்பவராக இருப்பார்கள். எனவே இதற்காக ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது.

அதில் ஒரு கடிகாரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கடிகாரத்தில் கைகளால் பிடித்துக்கொள்ளும் வகையில் ஒரு அமைப்பு இருந்தது. போட்டியாளர்கள் அந்த கடிகாரத்தில் ஏறி நிற்க வேண்டும். யார் இறுதி வரை கீழே விழாமல் இருக்கிறார்களோ அவர்களே ஜெயித்தவர்கள் என அறிவிக்கப்படும்.

எனவே இந்த போட்டியில் ஷாந்தி, ஜனனி மற்றும் ஜிபி முத்து ஆகியோர் கலந்துக்கொண்டனர். போட்டி துவங்கி சிறிது நேரங்களிலேயே சாந்தி தோல்வியடைந்தார். ஆனால் ஜனனியும் ஜிபி முத்துவும் விடாமல் போட்டி போட்டு வருகின்றனர்.

ஜிபி முத்து ஜெயிக்கும் பட்சத்தில் அவர் தலைவர் பொறுப்பை சரியாக மேற்கொள்வாரா? என்பது சந்தேகமே என சிலர் பேசி வருகின்றனர்.

Refresh