பிக்பாஸ் வீட்டிற்கும் புதிதாக வரும் 3 போட்டியாளர்கள் யார் தெரியுமா? நிலவரமே கலவரமாயிடுச்சே!..

Bigboss tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கணிசமான தொகை தின கூலியாக வழங்கப்படுகிறது. எனவே எத்தனை நாட்கள் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்களோ அத்தனை நாட்களும் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும்.

எனவே டைட்டில் ஜெயிப்பதை தாண்டி முடிந்தவரை அந்த வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய டார்க்கெட்டாக இருக்கிறது. அதற்காக மற்றவர்களுடன் சண்டை செய்து மக்கள் மத்தியில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.

எப்போதும் பிக்பாஸில் எலிமினேஷன் என்பது மக்கள் போடும் ஓட்டின் அடிப்படையில்தான் அமையும். ஆனால் இந்த முறை மாறாக டாஸ்க்கில் ஒழுங்காக விளையாடதவர்கள் பிக்பாஸில் இருந்து விலக நேரிடும் என கூறப்படுகிறது.

இப்போது இருக்கும் போட்டியாளர்களில் 3 பேர் நீக்கப்படுவர். அதற்கு பதிலாக ஏற்கனவே நீக்கப்பட்ட 3 பேர் உள்ளே வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. திரும்ப உள்ளே வரும் அந்த மூன்று பேர் யார் என பார்க்கும்போது அனன்யா, விஜய் வர்மா மற்றும் வினுஷா ஆகிய மூவர்தான் திரும்ப வீட்டிற்குள் வர இருக்கின்றனர் என கூறப்படுகிறது.