10 வருஷமா சினிமால இதைதான் செஞ்சியா!.. வீட்டிலேயே கலாய் வாங்கிய முனிஸ்காந்த்!.

actor munishkanth : திறமை உள்ள கலைஞனுக்கு தன்னை நிரூபிக்க ஒரு படம் போதுமானது என கூறலாம். அப்படி ஒரே படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் முனிஸ்காந்த்.

இவர் முதன் முதலாக முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் முனிஸ்காந்த் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து அதையே தனது பெயராக வைத்துக்கொண்டார்.

இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி பல வருடங்களாக அழைந்துக்கொண்டிருந்தார். தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்கு உருவமோ நிறமோ தடங்கல் கிடையாது என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்தவர் முனிஸ்காந்த்.

பல வருட போராட்டத்திற்கு பிறகே அவருக்கு முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் முனிஸ்காந்த் வீட்டில் அனைவரும் அவர் மீது நம்பிக்கையிழக்க துவங்கியிருந்தனர்.

அவர்களுக்கு சர்ப்ரைசாக இருக்கட்டும் என முண்டாசுப்பட்டி திரைப்படம் குறித்து சொல்லாமல் இருந்தார் முனிஸ்காந்த். இந்த நிலையில் படத்தில் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ட்ரைலரில் ஒரு காட்சியில்தான அவர் வருவார். அதை தன் தாயிடம் காட்டியுள்ளார். அதை பார்த்த அவரது தாய் 10 வருஷமா சினிமால இருக்க. இந்த ஒரு சீன் மட்டும்தான் நடிச்சியா என நக்கல் செய்துவிட்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து படமே வெளியானாலும் வீட்டில் சொல்ல கூடாது என முடிவெடுத்தார் முனிஸ்காந்த். ஆனால் படம் வெளியானதும் அவர் மிகவும் பிரபலமானார். அப்போது அவரிடம் பேசிய அவரது தாய் இவ்வளவு நாள் எல்லாம் என்னை இளையராஜா (முனிஸ்காந்தின் அண்ணன்) அம்மா என்றுதான் அழைத்து வந்தனர்.

ஆனால் இப்போது முனிஸ்காந்த் அம்மா என அழைக்கின்றனர். மிக பெருமையா இருக்கு என கூறியுள்ளார். இந்த விஷயத்தை முனிஸ்காந்த் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.