என் பொண்ண மன்னிச்சுடுங்க சார்… எல்லாத்துக்கும் மாயா பூர்ணிமாதான் காரணம்.. பிரதீப்பிடம் சாரி கேட்ட ஐஸ்வர்யாவின் அப்பா!..
Biggboss Pradeep : இதுவரை தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே நடக்காத அளவிற்கு இந்த சீசனில் முதல் முறையாக பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அது வேறு யாருமல்ல போட்டியாளர் பிரதீப்தான் என்பது பலரும் அறிந்த விஷயமே.
மக்கள் மத்தியிலும் பிரதிப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் வரிசையாக வெளியில் வரும் பெண்கள் பிரதீப்பை தவறாக கூறிவிட்டோம் என்பதை புரிந்து கொள்ள துவங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா வெளி வருவதற்கு முன்பே அவரது தந்தை பிரதீப்பிற்கு மெசேஜ் செய்திருக்கிறார். அந்த மெசேஜ்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து விட்டு சில நேரம் கழித்து அதை டெலிட் செய்து விட்டார் பிரதீப்.
அதில் பார்க்கும் பொழுது எனது மகளை நிக்சனிடம் இருந்து காப்பாற்ற நீங்கள் செய்தவற்றை நான் பார்த்தேன் என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்த பிரதீப் ஆனால் உங்கள் மகள் எனது பெயரை கெடுத்து விட்டார் என்று கூறியிருந்தார். ஆமாம் ஆனால் எனது மகள் அதை தனியாக முடிவெடுக்கவில்லை. மாயா மற்றும் பூர்ணிமாவின் பேச்சைக் கேட்டு அவ்வாறு செய்தார் என்று பதில் அளித்து இருக்கிறார். இதனை அடுத்து அந்த ஸ்கிரீன் ஷாட்டுகள் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.