பிக்பாஸ் போட்டியாளர்களை விட மக்கள் மோசமா நடந்துக்கிட்டாங்க!.. மனம் குமுறும் ஐஸ்வர்யாவின் தந்தை!.

Biggboss aishwarya : ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் பொழுது அதில் ஒரு காதல் கதை என்பது எப்போதும் இருந்து கொண்டிருக்கும். இந்த காதல் கதைதான் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமானதாக மாற்றும்.

ஆனால் இந்த முறை காதல் ஜோடிகளாகவே ரவீனாவும் மணியும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அவர்கள் காதல் ஜோடிகளாக இருந்தாலும் கூட அந்த வீட்டை பொருத்தவரை அதில் மிகவும் நாகரிகமாகவே இருவரும் நடந்து கொண்டனர்.

இதற்கு நடுவே நிக்சனுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட காதல் வெகுவாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து சில பிரச்சனைகளும் வந்தது ஐஸ்வர்யா எலிமினேட் ஆனதற்கு நிக்சன்தான் காரணம் என்றெல்லாம் பலரும் பேசி அது பல பிரச்சனைகளை உண்டாக்கியது.

aishu

இந்த நிலையில் பிக் பாஸில் இருந்து எலிமினேட் ஆன பிறகு வெளி உலகத்தில் தன்னைப் பற்றிய பிம்பம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட ஐஸ்வர்யா அதற்குப் பிறகு நிக்ஷனை சந்திக்கவே இல்லை. இந்த நிலையில் இது குறித்து ஐஸ்வர்யாவின் தந்தை பேசும்பொழுது முதலில் ஐஸ்வர்யா பிக் பாஸிற்கு செல்வதிலேயே எனக்கு விருப்பமில்லை.

நான் அவளிடம் எவ்வளவோ பேசினேன் இருந்தாலும் அவள் கேட்கவில்லை நான் பிரபலமாவதற்கு பிக் பாஸ் உதவும் என்று கூறிவிட்டாள். அதன் பிறகு எனது வாழ்வில் இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்களை நான் சந்தித்ததே கிடையாது.

ஐஸ்வர்யா பிக் பாஸிற்கு சென்ற பிறகு அவரை குறித்து நிறைய எதிர்மறையான கருத்துக்கள் வந்தன. போட்டியில் அவள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி பேசியிருந்தால் அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் அவளைக் குறித்து தவறாக பல விஷயங்களை மக்கள் பேசினார்கள். உண்மையில் பிக் பாஸ் போட்டியாளர்களை விட இந்த விஷயங்கள் தான் எனக்கு மோசமானவையாக இருந்தன ஏன் மக்கள் இவ்வளவு மோசமாக பேசுகிறார்கள் என்று தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது என்று மனம் வருந்தி கூறுகிறார் ஐஸ்வர்யாவின் தந்தை.