Bigg Boss Tamil
அவன் என்ன மாமனா? மச்சானா? ப்ரதீப்பிடம் எகிறிய விஷ்ணு! – விசித்திரா செய்த சம்பவம்!
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் 3வது நாள் டாஸ்க்கிலும் பிரச்சினை வெடித்துள்ளது. மாயா, விஷ்ணு இருவரையும் ஒரு வாக்குவாதம் செய்யும் நிகழ்ச்சி டாஸ்க்கில் பங்கேற்க செய்துள்ளார்கள்.
இந்த டாஸ்க்கில் ஆரம்பம் முதலே விஷ்ணு, மாயாவை எதிர்கொண்டு பேசாமல் இன்சல்ட் செய்து பேசி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தன் ஸ்டாண்டர்டில் நிற்க முடியாத விஷ்ணு டக்கென ப்ரதீப்பை இழுத்து ‘ஒரு கோ கண்டஸ்டண்டான ப்ரதீப்பை நீங்க கேவலமா நடத்துனீங்க” என பழி சொல்ல தொடங்கினார்.
இதனால் கடுப்பான மாயா “அவர் என்ன எனக்கு மாமனா? மச்சானா?” என ஒருபக்கம் பேச, உள்ளே புகுந்த ப்ரதீப் கேமின் கான்செப்ட் புரிந்து கொள்ளாமல் விஷ்ணு பேசுவதாகவும், தேவையின்றி தன்னை இழுப்பதாகவும் சொல்லி மாயாவுக்கு ஆதரவு தருவதாக பேசினார்.
“அடப்பாவி உனக்கு சப்போட்டாதானே பேசுனேன்.. எனக்கு எதிராவே திரும்பிட்டியே” என ஷாக் ஆன விஷ்ணு அடுத்து ப்ரதீப்பையும் பெர்சனல் அட்டாக் செய்யத் தொடங்கிவிட்டார். இதனால் டாஸ்க்கே டரியல் ஆன நிலையில் சமையற்கட்டில் வைத்து விஷ்ணுவிடம் பேசிய ‘விதிமீறல்’ விசித்திரா என்ன இருந்தாலும் மத்தவங்களை பெர்சனலாக அட்டாக் பண்ணுறது தப்பு என சொல்லி புரிய வைக்க முயன்றார். ஆனால் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களால் ஆடியன்ஸுக்கு ப்ரதீப் மேல் ஒரு ஆதரவு நிலை உருவாகியுள்ளது.