Bigg Boss Tamil
செஞ்சு விட்டுடுவேன்.. அர்ச்சனாவை டார்ச்சர் செய்யும் விஷ்ணு.. அதிகரிக்கும் ஆதரவுகள்!.. அவசரப்பட்டியே குமாரு!..
Bigboss tamil archana Vishnu : வைல்ட் கார்டு ரவுண்டில் பிக்பாஸில் நுழைந்த போட்டியாளர்களிலேயே அதிகமாக வரவேற்பை பெற்றவராக அர்ச்சனா இருக்கிறார். அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தப்போதே அவரை வைத்து செய்ய துவங்கினர் புல்லி கேங் கூட்டத்தினர்.
இதனை அடுத்து அர்ச்சனா இரு நாட்களாக கண்ணீர் விட்டு அழுது வந்தார். இதனால் மக்கள் மத்தியில் அர்ச்சனா மீது இரக்கம் ஏற்பட்டது. ஆனால் அடுத்த வாரம் முதலே அந்த கூட்டத்தை எதிர்க்கும் அளவிற்கு தைரியத்துடன் களம் இறங்கினார் அர்ச்சனா. இதனையடுத்து போன வாரம் அர்ச்சனா அழுதது எல்லாம் நடிப்பு என ஒரு கூட்டத்தினர் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இன்று விஷ்ணுவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. விஷ்ணு வழக்கமாக தேவையில்லாத வார்த்தைகளை வெளியிட்டுவிட்டு அது என் சுபாவம் என கூறுவது வழக்கம். ஆனால் அதை மற்றவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். எனவே அர்ச்சனாவையும் தேவையில்லாத வார்த்தையால் திட்டினார் விஷ்ணு.
இதனையடுத்து இருவருக்கும் பிரச்சனை உண்டானது. இந்த பிரச்சனையால் மீண்டும் அழ துவங்கிவிட்டார் அர்ச்சனா. ஆனால் விஷ்ணு, விச்சித்திரா என்று ஒரு கும்பல் சேர்ந்துக்கொண்டு அர்ச்சனா அழுவது போல நடிக்கிறார் என பேசி வருகிறது. ஆனால் வெளியான ப்ரோமோ வீடியோவை பொறுத்தவரை அதில் வரும் கமெண்டுகளில் அர்ச்சனாவிற்குதான் அதிக சப்போர்ட் உள்ளது என தெரிகிறது.
எனவே இது விஷ்ணுவின் எலிமினேஷனுக்கு காரணமாக அமைந்துவிடுமோ என்று பேச்சுக்கள் போய்க்கொண்டுள்ளன.