என்னது இந்த வாரம் எலிமினேஷன் நம்ம டைட்டில் வின்னரா!.. என்னப்பா சொல்றீங்க!..
Biggboss tamil saravana vikram: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒருவர் எலிமினேட் ஆவது என்பது வழக்கமான விஷயமாக இருந்தாலும் கூட ஒவ்வொரு வாரமும் யார் பிக் பாஷை விட்டு விலகப் போகிறார்கள் என்பது மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.
வெகு வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் சும்மாவே எதுவும் செய்யாமல் இருப்பவர்கள் எலிமினேட் ஆகாமல் மற்றவர்கள் எலிமினேட் ஆகி வருவதை பார்க்க முடிகிறது. ஏனெனில் நாமினேஷன் என வரும் பொழுது தனக்கு பகையாக இருக்கும் நபர்களை தொடர்ந்து சுட்டி காட்டுகின்றனர்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் இதனால் எதுவும் ஆடாமல் யாரிடமும் பகையாக இல்லாமல் இருப்பவர்கள் தப்பித்து விடுவார்கள் விடுகிறார்கள். ஒன்றுமே செய்யாமல் இருந்த கானா பாலா அக்ஷயா போன்றோர் சில வாரங்கள் பிக் பாஸில் தாக்குப்பிடிப்பதற்கு இதுவே காரணமாக இருந்தது.
அதில் மிக முக்கியமானவர் சரவணன் விக்ரம். அவர் பிக்பாஸ்க்கு வந்த முதல் இந்த வாரம் முதல் இப்போது வரை பெரிதாக அவர் எந்த ஒரு விஷயமும் செய்யவில்லை இருந்தாலும் இன்னும் பிக் பாஸில் தொடர்ந்து இருந்து வருகிறார் சரவணன் விக்ரம்.
இது மட்டுமின்றி நான்தான் டைட்டில் வின்னர் ஆவேன் என்றும் கூறியிருக்கிறார் இந்த நிலையில் இந்த வாரம் அவர்தான் வெளியேறுகிறார் என்று ஏற்கனவே மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஆனால் ஞாயிறு பிக் பாஸில்தான் யார் எலிமினேஷன் என்று தெரியும்.