Connect with us

பையா 2 வில் ஜான்வி கபூர் நடிக்கவில்லை! –  தகவல் அளித்த துணிவு தயாரிப்பாளர்!

Latest News

பையா 2 வில் ஜான்வி கபூர் நடிக்கவில்லை! –  தகவல் அளித்த துணிவு தயாரிப்பாளர்!

cinepettai.com cinepettai.com

தமிழில் தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் ஆவார்.

போனி கபூர் இயக்கத்தில் தற்சமயம் பையா 2 திரைப்படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பேச்சு இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யாவை நடிக்க வைக்க இருக்கின்றனர்.

கதாநாயகியாக நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. நடிகை ஸ்ரீதேவிக்கு ஏற்கனவே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்து வந்ததால் அவரது மகளுக்கும் கூட இங்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜான்வி கபூர் ஏற்கனவே பாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். இந்த நிலையில் தற்சமயம் ஜான்வி கபூர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தயாரிப்பாளர் போனி கபூர் கேட்டுக்கொண்டுள்ளார்.

POPULAR POSTS

lingusamy kamalhaasan
vishal rathnam
ks ravikumar vishal
vishal
prakash-raj-1
oru nodi poster
To Top