Cinema History
அவன் படம் சரிவராதுன்னு கதையை நான் மாத்துனேன்!.. மார்க் ஆண்டனி குறித்து எஸ்.ஜே சூர்யா…
தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. முதன்முதலாக தமிழ் சினிமாவில் இயக்குனராகத்தான் அறிமுகமானார் எஸ் ஜே சூர்யா. அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார்.
குஷி திரைப்படத்திற்கு பிறகு எஸ்.ஜே சூர்யா அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி அவர் கதாநாயகனாக நடித்து வெளியான நியூ திரைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
அதன் பிறகு ஒரு சில படங்கள் அவரே நடித்து இயக்கினார்.ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்தது மூலமாக ஒரு நடிகராக அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து வரிசையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். மாநாடு படம் அவருக்கு இன்னொரு மைல் கல்லாக அமைந்தது.
தற்சமயம் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முதலில் என்னிடம் கதையை கூறும் பொழுது அது சரியாக இல்லை. இதே போன்ற கதைகளை எடுத்து நான் நிறைய அடி வாங்கி இருக்கிறேன்.
எனவே நீ இப்படியான கதைகளை இனி எடுக்காதே உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எனவே புதிய கதையை மாற்றி எடு என அறிவுரை கூறினேன் அதற்கு பிறகு தான் மார்க் ஆண்டனி கதையை அவர் எழுதினார் என தனது பேட்டியில் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.