மனைவியை கலாய்ச்சு முதல் படம்.. ரவி மோகன் செய்த சம்பவம்..!

நடிகர் ரவி மோகனுக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து ஆன பிறகு ரவி மோகன் துவங்கிய நிறுவனம்தான் அவருடைய தயாரிப்பு நிறுவனம்.

இந்த நிலையில் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் படமாக ப்ரோ கோட் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ரவி மோகன் எஸ்.ஜே சூர்யா அர்ஜுன் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கார்த்திக் யோகி இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் படத்தின் கதையின் சாரா அம்சமானது கணவர்களை கொடுமைப்படுத்தும் மனைவிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது.

இப்போதைய காலகட்டங்களில் நிறைய பெண்கள் ஆண்களை அதிக அடக்குமுறைக்கு உள்ளாக்குகின்றனர். அப்படியான அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று ஆண்கள் அந்த திருமண வாழ்க்கையை விட்டு வெளிவருவதற்கு செய்யும் விஷயங்களை அடிப்படையாக வைத்து பாடத்தின் கதைகளம் செல்வதாக தெரிகிறது.

இந்த படத்தின் ப்ரோமோ தற்சமயம் வெளியாகி இருக்கிறது ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தான் அவர்கள் பிரிவை சந்தித்தனர். எனவே ஆர்த்தியை குறிப்பிடும் விதத்தில் தான் இந்த படத்தின் கதை அம்சத்தை அமைத்திருக்கிறார் ஜெயம் ரவி என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.