Connect with us

நயன்தாராவுக்கு குழந்தை பிறக்காமல் போனதுக்கு இதுதான் காரணமா?.. வெளிவந்த ரகசியம்!.

nayanthara

News

நயன்தாராவுக்கு குழந்தை பிறக்காமல் போனதுக்கு இதுதான் காரணமா?.. வெளிவந்த ரகசியம்!.

Social Media Bar

சினிமாவில் அவ்வப்போது சில சர்ச்சைகள் இணையதளங்களில் பரவி வருவது வழக்கமான ஒன்றுதான். மேலும் இந்த வதந்திகளுக்கும், சர்ச்சைகளுக்கும் நீண்ட காலமாக ஒரு நடிகை சிக்கியுள்ளார் என்று கூறினால் அது நடிகை நயன்தாரா.

இவர் சினிமாவில் நடிக்க வந்த காலத்திலிருந்து பல சர்ச்சைகளுக்கும், கிசுகிசுகளுக்கும் ஆளானவர். அந்த வகையில் இவர் நீண்ட காலமாக திரைப்படங்களில் நடிப்பதை விட்டு விலகி இருந்தார்.

ஆனால் மீண்டும் இவர் நடிக்க வந்து தற்பொழுது லேடிஸ் சூப்பர் ஸ்டார்-ஆக அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக நயன்தாரா இருக்கிறார்.

தற்பொழுது அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ஒரு பதிவானது அவரின் ரகசியத்தை உடைத்துள்ளதாக பலரும் பலவிதமான கமெண்ட் செய்து வருகிறார்கள.

நடிகை நயன்தாரா

Nayanthara: மலையாளத்தை பூர்வீகமாகக் கொண்ட நயன்தாரா, ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சூப்பர் ஸ்டார் போன்ற முன்னணி நடிகருடன் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் அவர் எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டாரோ, அந்த அளவிற்கு பல நடிகர்களுடன் சர்ச்சையிலும் சிக்கினார்.

இதனால் சில வருடங்கள் நடிப்பதற்கு ஓய்வு எடுத்துக் கொண்டு, மீண்டும் கம் பேக் கொடுத்தார். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைக்கு தாயானார்.

இந்நிலையில் அவரின் இரு குழந்தைகளும் வாடகை தாய் மூலம் பெறப்பட்டது என்பது தெரிய வந்தது. இதனால் நயன்தாராவை பலரும் பலவிதமான கமெண்ட்களில் பேசி வந்தார்கள். சினிமாவில் நடிப்பதற்காக இவர் இவ்வாறு செய்து உள்ளார் என பலரும் குற்றச்சாட்டு கூறி வந்தனர். மேலும் பயில்வான் ரங்கநாதன் ஒரு படி மேலே சென்று அவருக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டு விட்டதாகவும் இதனால் தான் அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் கூறியிருந்தார்.

சர்ச்சையை கிளப்பிய பதிவு

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகை நயன்தாரா செம்பருத்தி பூ பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். செம்பருத்தி டீ அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள கொலஸ்ட்ரால்கள் குறையும். இரத்த அழுத்தம் சீராகும். ஆயுர்வேதத்தில் பழங்காலமாகவே செம்பருத்தி பூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு சிறந்த மூலிகையாகும் பல ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது என அதில் பதிவிட்டு இருந்தார்.

nayanthara

இதனைப் பார்த்த மருத்துவர் ஒருவர், செம்பருத்தி டீ நன்றாக உள்ளது என பதிவிட்டிருப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து செம்பருத்தி பூ டீ குடித்து வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும் என சொல்வது முற்றிலும் தவறான ஒரு விஷயமாகும். ஏனென்றால் செம்பருத்தி பூ டீ தொடர்ந்து குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படும்.

மலட்டுத்தன்மை ஏற்பட்டால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. எனவே நயன்தாரா இது போன்ற தவறான பதிவுகளை பதிவிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர் எச்சரித்தார்.

இந்நிலையில் இணையத்தில் பலரும் இவர் செம்பருத்தி டீ தினம்தோறும் குடித்து வந்ததால் தான் இவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடிய தன்மை போய்விட்டதா? இதனால் தான் அவருக்கு கற்பப்பை நீக்கப்பட்டதா? எனவும் பலரும் பல விதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

To Top