டி ப்ளாக் படம் எப்படி இருக்கு – டிவிட்டர் ரிவீவ்

பொதுவாக நடிகர் அருள் நிதி திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு அவரிடையே ஒரு எதிர்பார்ப்பு உண்டு. ஏனெனில் ஒவ்வொரு திரைப்படத்திலும் புது புது கதைகளத்தை தேர்ந்தெடுத்து வித்தியாசமான திரைப்படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் அருள்நிதி. இந்த நிலையில் அருள்நிதி நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் டி ப்ளாக்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம் போலவே இந்த படமும் திரில்லர் படம் என கூறப்படுகிறது. இந்நிலையில் படம் செமையான த்ரில்லர் படமாக இருப்பதாக டிவிட்டரில் கூறப்பட்டுள்ளது. சீட் நுனியில் அமர்ந்து படத்தை காணுமளவில் படம் சூப்பராக வந்துள்ளது என பலரும் கூறுகின்றனர்.

See also  வரவேற்பை பெரும் ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படம் - டிசி லீக்ஸ் ஆஃப் சூப்பர் பெட்ஸ்

படம் மொத்தம் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் இருக்கிறதாம். அந்த 2 மணி நேரமும் நம்மை சலிக்காமல் திரையரங்கில் அமர வைக்கும் அளவில் படம் உள்ளதாம். 

பலரும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிவீவ் அளித்து வருகின்றனர். எனவே படம் சிறப்பான வெற்றியை அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.