இனிமே நடிச்சா த்ரில்லர் படம் மட்டும்தான் போல – அருள்நிதிக்கு வரிசையாக குவியும் க்ரைம் திரைப்படங்கள்

நடிகர் அருள்நிதி எப்போதும் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து திரைப்படம் நடிக்க கூடியவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. அவர் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமாண்டி காலணி ஆகியவை வெகுவாக பேசப்பட்ட க்ரைம் த்ரில்லர் மற்றும் ஹாரர் திரைப்படங்கள் ஆகும். 

இதனால் இவருக்கு வரிசையாக க்ரைம் திரில்லர் மற்றும் ஹாரர் திரைப்படங்கள் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தற்சமயம் வெளியாகி இருக்கும் டி ப்ளாக் திரைப்படமும் கூட அந்த வகையை சேர்ந்ததுதான்.

See also  கடலுக்கு அடியில் அஜித்துக்கு பேனர் வைத்த ரசிகர்கள்

இந்நிலையில் அடுத்து அவர் நடித்த தே ஜா வு என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் லைக்கா நிறுவனத்திற்கும் ஒரு திரைப்படம் நடித்து கொடுத்துள்ளாராம். மேலும் டைரி என்கிற பேரில் இன்னொறு த்ரில்லர் படத்தில் நடிக்கிறாராம் அருள்நிதி. இவையெல்லாம் இல்லாமல் அடுத்து டிமாண்டி காலணியின் இரண்டாம் பாகமானது படமாக்கப்பட இருக்கிறதாம்.

ராட்சஸி திரைப்படத்தின் இயக்குனரான கவுதம் அவர்களும் அருள்நிதியை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறாராம்.

See also  சிவகார்த்திகேயனை யாருன்னே தெரியாது என சொன்ன மிஸ்கின் - இப்ப நிலைமையே மாறிடுச்சி

இதனால் நான்ஸ்டாப்பான திரில்லர் படங்களை அருள்நிதி தமிழ் சினிமாவில் வழங்க இருக்கிறார் என தெரிகிறது.