News
இந்த புத்தகத்துல இருந்து எடுத்த கதையாம் வாரிசு? – படத்தின் கதை என்ன?
தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம்தான் வாரிசு. இந்த படம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே தளபதி விஜய்யை பிரபலப்படுத்துவதற்காக எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்கிறார்.

இந்நிலையில் லார்கோ வின்ச் என்கிற காமிக் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதைதான் வாரிசு என்று ஒரு பேச்சு உள்ளது. லார்கோ வின்ச் காமிக்ஸ் கதை என்ன என பார்த்தால் வின்ச் என்கிற மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் திடீரென இறக்கிறார். அவருக்கு பிறகு வாரிசு இல்லை என்பதால் யாரோ திட்டமிட்டு அவரை கொலை செய்கிறார்கள்.

ஆனால் அந்த தொழிலதிபர் யாருக்கும் தெரியாமல் ஒரு சிறுவனை தத்தெடுத்து பல வருடங்களாக வளர்த்து வருகிறார். அவனுக்கு அனைத்து தொழில் நுணுக்கங்களையும் சொல்லி தருகிறார் அவன் தான் லார்கோ வின்ச். இந்நிலையில் அவர் இறப்பிற்கு பிறகு அவரது வளர்ப்பு மகன் ஆன லார்கோ வின்ச் தலைவர் ஆகிறார். பிறகு தனது தந்தையின் கொலை குறித்து கண்டுப்பிடிக்கிறார். ஏற்கனவே இந்த கதையை அடிப்படையாக கொண்டு சாஹோ என்கிற திரைப்படம் வெளியானது.
இந்த கதையே வாரிசு என பலரும் பேசி வருகின்றனர். எப்படி இருந்தாலும் விஜய் நடிக்கும்போது இந்த கதை அவருக்கு நல்ல வரவேற்பை அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
