எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு போஸ் கொடுத்த பிரபல நடிகர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

டியர் காம்ரெட், கீதா கோவிந்தம் போன்ற திரைப்படங்கள் தமிழ் டப்பிங் செய்யப்பட்ட போது அதன் வழியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரக்கொண்டா.

பிறகு இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தமிழில் ஆதித்ய வர்மா என எடுக்கப்பட்டது. ஆனாலும் இவரது தனிப்பட்ட நடிப்பின் காரணமாக இன்று வரை அர்ஜூன் ரெட்டியே அனைவராலும் பேசப்படும் படமாக உள்ளது.

இதன் பிறகு தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்த நமது ஹீரோ தற்சமயம் முண்ணனி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தற்சமயம் லிகர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாக்சிங்கை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. 

தெலுங்கில் பத்ரி, போக்கிரி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பூரி ஜெகநாத் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் தேவரக்கொண்டா.

அந்த புகைப்படத்தில் அவர் எந்த ஆடையும் போடாமல் முழு நிர்வாணமாக இருக்கிறார். இந்த புகைப்படம் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Refresh