News
விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் சிவகார்த்திகேயன் – புது ரக டீம்
தென்னிந்தியாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ட்ரெண்டில் இருக்கும் ஒரு கதாநாயகன் விஜய் தேவரகொண்டா.

சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் வெளியீட்டு விழாவானது ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தெலுங்கில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவும் பங்கு கொண்டார்.
சிவகார்த்திகேயன் விஜய் தேவரக்கொண்டா பற்றி கூறும்போது ”மிகவும் குறுகிய காலத்தில் மக்களிடம் பிரபலமாகிய நடிகராக விஜய் தேவரகொண்டா இருக்கிறார். அதுவும் இந்தியா முழுவதும் அனைவரும் அறியும் வகையில் ஒரு பேன் இந்தியா நடிகராக மாறிவிட்டார் என கூறியிருந்தார்”.
மேலும் தனக்கு விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க ஆசை இருப்பதாகவும், தற்சமயம் அதற்கான வாய்ப்புகள் அமைந்து வருவதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். அதை வைத்து பார்க்கும்போது வரும் நாட்களில் இவர்கள் இருவரும் இணைந்து திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிகிறது.
