News
சாத்தான் வழிப்பாட்டின் அடையாளமா? – டிமாண்டி காலணி 2 போஸ்டர்- ஒரு அலசல்!
இயக்குனர் அஜய் ஞான முத்து இயக்கி அருள்நிதி நடித்து 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் டிமாண்டி காலணி. இந்த படம் இயக்குனர் அஜய் ஞானமுத்துவிற்கு முதல் படமாகும். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு இமைக்கா நொடிகள் திரைப்படத்தை இயக்கினார். அதுவும் கூட நல்ல வெற்றியை தந்தது. ஆனால் அதற்கு பிறகு இவர் இயக்கி விக்ரம் நடித்து வெளிவந்த கோப்ரா திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து டிமாண்டி காலணியின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் அஜய் ஞானமுத்து. இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் அதிகமாக கிருஸ்துவ மத அடையாளங்களை காண முடிகிறது அவற்றை பற்றி பார்ப்போம்.
முதலில் டிமாண்டி காலணி முதல் பாகத்திலேயே அந்த பேய் கிருஸ்துவ கடவுள்களுக்கு பயப்படுவது போலதான் காட்சிகள் இருக்கும். ஒருவேளை பேய் கிருஸ்துவ மதத்தை சார்ந்ததாக இருப்பது கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
இரண்டாம் பாகத்தின் போஸ்டரில் பேக்ரவுண்டில் வட்டமிட்டு அதில் நட்சத்திரம் வரையப்பட்டுள்ளது. கிருஸ்துவ மத குறிப்பின்படி இது சாத்தானை தெய்வமாக வழிப்படும் ஒரு சாராரின் அடையாளமாகும். எனவே சாத்தான் வழிப்பாட்டை மையமாக வைத்து இதன் இரண்டாம் பாகம் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

மேலும் அதற்கு மேல் ஒரு எருமை மாட்டின் தலை உள்ளது. எருமை மாட்டின் தலையும் சாத்தானின் குறியீடாகும். கிருஸ்துவ மத நூலான பைபிளில் கூட மோசே காலத்தில் எருமை உருவத்தை கடவுளாக வணங்கியதற்காக கடவுள் மனிதர்களை தண்டித்த கதை உண்டு. எனவே இந்த படம் சாத்தான் வழிப்பாட்டை மையப்படுத்திய படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இருக்கும் பட்சத்தில் முதல் பாகத்தை விடவும் இது டெரராக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
