Cinema History
பரிசளித்த ஆசானுக்கு நன்றிகள் – யுவனுக்கு நன்றி தெரிவித்த ப்ரேம் ஜி
இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே சினிமாவில்தான் இருக்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும்.

இளையராஜாவின் குடும்பம் இரண்டு தலைமுறைகளாக தமிழ் சினிமாவில் தொண்டு ஆற்றி வருகிறது. இளையராஜாவிற்கு அடுத்து அவரது மகனான யுவன் சங்கர் ராஜா இசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
கங்கை அமரனின் மகன்களாக இயக்குனர் வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் உள்ளனர். இவர்கள் அனைவருமே மிகவும் நட்புடன் பழகி வருகிறார்கள். வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களுக்குமே யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்து தந்துள்ளார்.
நடிகர் பிரேம்ஜிக்கு இசையின் மீதும் ஆர்வம் உண்டு. அவருக்கும் இசையமைக்க தெரியும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பிரேம்ஜிக்கு ஐபோன் வாங்கி தந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.
இதற்காக என் குருவிற்கு நன்றிகள் என ப்ரேம்ஜி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால் எதற்காக இந்த பரிசு என கூறவில்லை.
