நடிச்சா மியுசிக் போடக்கூடாது? – யுவனுக்கும் ப்ரேம்ஜிக்கும் இடையே உள்ள அக்ரிமெண்ட் தெரியுமா?

இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனின் புதல்வர்கள்தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம் ஜி.

வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் ப்ரேம் ஜி எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை காணலாம்.

மங்காத்தா, மாஸ், பிரியாணி, சென்னை – 600028, மாநாடு, கோவா இப்படி அனைத்து படங்களிலுமே பிரேம்ஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் உண்மையில் ப்ரேம்ஜிக்கு இசையமைப்பதில்தான் அதிக ஆர்வம் என கூறப்படுகிறது.

இவர் யுவன் சங்கர் ராஜாவிடம்தான் இசையமைக்க கற்றுக்கொண்டாராம். அவருக்கு நன்றாக இசை அமைக்க தெரியும் என கூறப்படுகிறது. ப்ரேம்ஜிக்கு படங்களில் இசையமைக்க வேண்டும் என ஆசை. இதனால் ஒரு வெங்கட் பிரபு படத்திற்காவது ப்ரேம்ஜி இசை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

ஆனால் யுவன் சங்கர் ராஜா ப்ரேம்ஜியுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளார். அதாவது ப்ரேம்ஜி அவர் நடிக்கும் எந்த படத்திலும் இசையமைக்க கூடாது. ஒரு வேளை வெங்கட் பிரபு படத்தில் அவருக்கு இசையமைக்க ஆசையாய் இருந்தால் அந்த படத்தில் அவர் நடிக்க கூடாது. அப்படி ப்ரேம்ஜி நடிக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பார். இதுதான் அந்த ஒப்பந்தம்.

ஆனால் வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் ப்ரேம்ஜி நடித்து விடுவதால் இதுவரை அவரது படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ப்ரேம்ஜிக்கு கிடைக்கவேயில்லை. தொடர்ந்து யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்து வருகிறார்.

இந்த செய்தியை வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொண்டார்.

Refresh