News
ரவுடிகளை வச்சி இமான் என்ன மிரட்டுனார்!. சிவகார்த்திகேயன்தான் உதவினார்!.. இமான் முதல் மனைவி ஓப்பன் ஸ்டேட்மெண்ட்!.
தமிழ் சினிமாவில் தற்சமயம் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து மக்கள் மத்தியில் தன்னை பதிய வைத்து சினிமாவிலும் வாய்ப்பை பெற்றார்.
ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவிற்கு வந்த பொழுது அவருக்கு மிகப்பெரியதாக வரவேற்பு எல்லாம் இருக்கவில்லை. எனவே தொடர்ந்து காமெடி கதாநாயகனாக தன்னை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக கதாநாயகனாக மாறினார்.
தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சிவகார்த்திகேயனுக்கு பெரும் ஹிட் கொடுத்த ரஜினி முருகன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் டி இமான்.
சில நாட்களுக்கு முன்பு இமான் ஒரு பேட்டியில் பேசும் பொழுது சிவகார்த்திகேயன் குறித்து சர்ச்சையான விஷயம் ஒன்றை பேசியிருந்தார். சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் பெரிய பிரச்சனை ஏற்பட்டதாகவும் அது எதனால் என்று வெளியில் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் இனி இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுக்கு நான் இசையமைக்க மாட்டேன் அதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் கூட இசையமைக்க மாட்டேன் ஏனெனில் என் வாழ்க்கையே மோசமாக்கி விட்டார் சிவகார்த்திகேயன் என்றெல்லாம் பேசியிருந்தார் இமான்.
இதனை அடுத்து எதனால் இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சண்டை உருவானது என்பது குறித்து பல்வேறு பேச்சுக்கள் போய்க் கொண்டிருந்தன. இந்த நிலையில் இமானின் முதல் மனைவியான மோனிகா ஒரு பேட்டியில் கூறும் பொழுது என்ன பிரச்சனை என்பதை விளக்கி இருந்தார்.
இமானுக்கு வேறு ஒரு பெண் மீது விருப்பம் இருந்த காரணத்தினால் தனது முதல் மனைவியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது முதல் மனைவி ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் அரசியல்வாதிகளை எல்லாம் வைத்து உங்கள் அப்பாவை கொன்னுடுவோம் என்று கூறி மிரட்டி 46 நாட்களில் விவாகரத்தை வாங்கினாராம் இமான்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிரிய கூடாது என்று சேர்த்து வைப்பதற்குதான் சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வந்தார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்று பேட்டியில் கூறியுள்ளார் மோனிகா. இதனை அடுத்து இந்த சர்ச்சை மேலும் பெரிய பிரச்சனை ஆகி உள்ளது
