Hollywood Cinema news
ஒ#$ல!.. கெட்ட வார்த்தையிலேயே துவங்கிய டெட் பூல் வால்வரின் ட்ரைலர்!. என்ன கதையா இருக்கும்!..
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸிற்கு ரசிகர்கள் இருப்பதற்கு முன்பிருந்தே எக்ஸ் மேனிற்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஏனெனில் மார்வெலின் சூப்பர் ஹீரோக்களில் பெண்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள்தான் முதன் முதலில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.
இதனால் மார்வல் யுனிவர்ஸ் துவங்கியப்போது அதில் எக்ஸ் மேனும் இருக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆவலாக இருந்தது. ஆனால் எக்ஸ் மேன் சோனியிடம் இருந்ததால் வெகு காலங்களாய் அவர்களால் அதை எம்.சி.யுவில் சேர்க்க முடியவில்லை.
இந்த நிலையில் தற்சமயம் அதை ஒன்றினைக்கும் வகையில் வரவிருக்கிறது டெட் பூல் மற்றும் வால்வரின் திரைப்படம். லோகன் திரைப்படத்திலேயயே வால்வரின் இறந்துவிட்டதாக காட்டப்பட்ட நிலையில் இந்த படத்தில் எப்படி அந்த கதாபாத்திரம் உயிரோடு வந்தது என பார்க்கும்போது இது மல்டி வர்ஸ் கதை என்பது ட்ரைலர் மூலமாக தெரிகிறது.
கதைப்படி உலகை காப்பாற்றுவதற்காக வேறு யுனிவர்ஸிற்கு செல்லும் டெட் பூல் அங்கிருந்து எக்ஸ் மேனை கூட்டிக்கொண்டு வருவது கதையாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதன் ட்ரைலர் முடிவில் டாக்டர் ஸ்ட்ரேஞ்சின் சக்திகள் பயன்படுத்தப்பட்டது போன்ற காட்சிகள் இருக்கின்றன.
எனவே டெட் பூலையும், வால்வரினையும் மார்வெல் யுனிவர்ஸில் இணைக்கும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.