30 வருஷமா அடிச்சுக்க ஆள் இல்லை..! உலகை கலக்கும் anime தொடர்! – Detective Conan

ஷினிச்சி குடோ என்னும் ஹை ஸ்கூல் மாணவன் ஆர்தர் கொனான் டாயிலின் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் மீதான ஆர்வத்தால் பெரிய டிடெக்டிவ் ஆகிறான். பல மர்ம குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கிறான்.

ஒரு சமயம் ஒரு கடத்தல் கும்பலை பின் தொடர்ந்து செல்லும் ஷினிச்சியை அந்த கும்பல் தாக்கி விடுவதுடன், ஒரு ஆராய்ச்சியில் இருந்த அபாயகரமான மாத்திரையும் அவனை விழுங்க செய்கின்றனர். இதனால் ஸ்கூல் படிக்கும் குட்டி பையனாக மாறி விடுகிறான் ஷினிச்சி. தன்னை பழையபடி மாற்ற முடியுமா என தன் வீட்டின் அருகே உள்ளே ஆராய்ச்சியாளர் ஆகாசாவிடம் கேட்க அவரோ அவனுக்கு எந்த மருந்தை கொடுத்தார்கள் என தெரிந்தால் தான் அதை சரிசெய்ய முடியும் என சொல்கிறார்

தனிக்கட்டையான அந்த ஆராய்ச்சியாளர் ஷினிச்சி சரியாகும் வரை ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டுமென கருதி ஷினிச்சியின் காதலி ரான் மொரியிடமே ஷினிச்சியை ஒப்படைத்து விடுகிறார்.

தான் இப்படி ஆகி விட்டது ரானுக்கு தெரிந்தால் வருந்துவாள் என்பதால் தன்னை ஆகாசாவின் உறவினர் வீட்டு பையன் என அறிமுகப்படுத்தி கொள்ளும் ஷினிச்சி, தனது பெயரையும் கோனான் (ஆர்தர் கொனான் டாயிலின் பெயரில் இருந்து) என வைத்துக் கொள்கிறான்.

ரான் முரேவின் அப்பாவும் ஒரு டிடெக்டிவ் தான்.. அதனால் அங்கு இருந்தபடியே அவருக்கு வரும் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிவதுடன், தன்னை இப்படி ஆக்கிய கும்பலையும் தேடி வருகிறான் டிடெக்டிவ் கோனன்.

1996 இல் தொடங்கிய இந்த தொடர் case closed என்ற பெயரில் இதுநாள் வரை 1000 எபிசோடுகள் தாண்டி வெற்றிகரமாக ஓடி கொண்டே இருக்கிறது. மேலும் பல திரைப்படங்களும், ஸ்பின் ஆப் தொடர்களும் கூட வெளியாகியுள்ளன.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version