வாலி போட்ட ஒரே பாட்டு.. ஆடிப்போன ஏ.வி.எம்.. எனக்கே டெஸ்ட்டா!..

கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் கவிஞராக பார்க்கப்படுபவர் வாலி. இவர் எழுதிய பல பாடல் வரிகள் இப்பொழுதும் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளன என்று கூறலாம் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி கலர் சினிமா வரையிலுமே அவரது பாட்டுக்கு இருந்த மதிப்பு மட்டும் குறையவே இல்லை.

எவ்வளவு தொழில் நுட்பங்கள் மாறி இருந்தாலும் கூட அதற்கு ஏற்ற மாதிரி புதிய தலைமுறைக்கு தகுந்தாற்போல பாடல் வரிகளை எழுதுவதில் வாலி வல்லவராக இருந்தார். வாலி சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அவர் தெய்வத்தாய் என்கிற ஒரு திரைப்படத்திற்கு பாடல் வரிகளை எழுதி இருந்தார்.

அந்த பாடல்களை கேட்ட ஏ.வி.எம் செட்டியாருக்கு அந்த பாடல்கள் மிகவும் பிடித்திருந்தன. சரி வாலி நன்றாக பாடல் வரி எழுதுகிறாரா? என்று ஒரு டெஸ்ட் செய்வோம். என்று நினைத்த ஏவிஎம் செட்டியார் அப்போது அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த சர்வர் சுந்தரம் படத்திற்கு பாடல் வரிகளை எழுதுவதற்காக வாலியை அழைத்து இருந்தார்.

ஆனால் ஏவிஎம் செட்டியார் வெகு நேரம் காத்திருந்தும் வாலி வராததால் அவர் சென்று விட்டார். தாமதமாக வந்த வாலி வந்த அரை மணி நேரத்தில் ஒரு பாடலுக்கு ஒரு பாடல் வரியை எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விட்டார். அதன் பிறகு அதை வந்து கேட்ட ஏ.வி.எம் செட்டியார் திகைத்துப் போனார் எவ்வளவு சிறப்பான ஒரு பாடல் வரியாக இருக்கிறது, என்று கூறிவிட்டு சென்றுள்ளார். அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற பாடலின் வரிகள் தான் அவை, அதன் பிறகு ஏ.வி.எம் நிறுவனத்திற்கு பல பாடல் வரிகளை எழுதினார் வாலி. இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்து உள்ளார் வாலி.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version