நடு ரோட்டில் லாரன்ஸை நிறுத்தி ரசிகர் கேட்ட கேள்வி!.. கண் கலங்கி போன ராகவா லாரன்ஸ்..

தமிழ் சினிமாவில் அற்புதம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக இருந்த ராகவா லாரன்ஸ் திடீரென அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனாலும் அந்த படம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

அதனை தொடர்ந்து முனி திரைப்படம் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. முனி திரைப்படத்திற்கு பிறகு அவர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு படம் என நடித்து வந்தார். அந்த படங்கள் அனைத்திற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனாலும் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து குறைவாகவே நடித்து வந்தார். இந்த விஷயம் அறிந்த விஜய் ஒருமுறை அவரை நேரில் சந்திக்கும்போது உனக்குதான் வரவேற்பு இருக்கு, பிறகு ஏன் குறைவாக படம் நடிக்கிறாய்? என்று கேட்டுள்ளார்.

அதே மாதிரி லாரன்ஸ் வழக்கமாக செல்லும் ராகவேந்திரா கோவிலுக்கு ஒருமுறை செல்லும்போது அங்கு அவரை சந்திப்பதற்காக ஒருவர் அடிக்கடி முயற்சித்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த ராகவா லாரன்ஸ் அவரை அழைத்து என்ன விஷயம் என கேட்டார். பெரும்பாலும் அவரிடம் உதவி பெறவே பலர் அவரை பார்க்க வருவார்கள்.

ஆனால் அந்த நபர் தலைவா நான் உங்கள் ரசிகர் தலைவா, எங்களுக்காக வருடத்திற்கு ரெண்டு படம் நடி தலைவா என கூறினார். அதை கேட்டதும் எனக்கு கண் கலங்கி விட்டது. அதன் பிறகுதான் தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version