Connect with us

பொண்ணுங்க உடையில் நடிக்கணும்!.. படக்குழுவின் பேச்சால் கடுப்பான சித்தார்த்!..

siddharth

Cinema History

பொண்ணுங்க உடையில் நடிக்கணும்!.. படக்குழுவின் பேச்சால் கடுப்பான சித்தார்த்!..

Social Media Bar

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் சித்தார்த். பெரும் நடிகர்கள் அளவிற்கு சினிமாவில் சித்தார்த் பிரபலமாக இல்லாவிட்டாலும் கூட அவரது திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு ஆவல் இருக்கதான் செய்கிறது.

இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து அதன் பிறகு கதாநாயகன் ஆனவர் சித்தார்த். சமூகம் சார்ந்து பல விஷயங்களை தனது திரைப்படத்தில் பேசியவர் சித்தார்த். இவர் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் நடிக்கும்போது ஒரு காட்சியில் ஜிவி பிரகாசுக்கு பெண்கள் அணியும் நைட்டி என்னும் ஆடையை அணிந்து அழைத்துச் செல்வார் சித்தார்த்.

அதன் பிறகு ஒரு காட்சியில் சித்தார்த்தின் அம்மா அவரிடம் பேசும் பொழுது பெண்களின் ஆடையை இழிவாக பார்த்ததால் தானே நீ அந்த ஆடையை அணிவித்து அவனை அழைத்து வந்தாய் என்று கூறி எங்கள் ஆடை என்ன அவ்வளவு கேவலமானதா? என்று ஒரு கேள்வியை கேட்பார்.

அந்தப் படத்திற்கு பிறகு சித்தார்த்தத்திற்கு பெண்கள் ஆடை குறித்து ஒரு விழிப்புணர்வு வந்தது. எனவே டக்கர் திரைப்படத்தில் அவர் பெண் ஆடையை அணியும் ஒரு காட்சி வரும் பொழுது எந்தவித தயக்கமும் இல்லாமல் அந்த காட்சியில் நடித்தார். அப்பொழுது இருந்த பட குழுவினர் இந்த ஆடையை அணிவதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லையா? சார் என்று கேட்டுள்ளனர் அதனால் கடுப்பான சித்தார்த் இந்த ஆடையில் கூச்சம் அடைய என்ன இருக்கிறது என்று கேட்டு சத்தம் போட்டு உள்ளார் அதை அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

To Top