சீனை கட் பண்ணி என்னை வசமா கோர்த்து விட்டுட்டார் அந்த இயக்குனர்!.. காபியடித்ததாக தேவா மீது வந்த குற்றம்!..
கானா இசையை தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்து அதற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்ததில் இசையமைப்பாளர் தேவாவிற்கு முக்கிய பங்குண்டு. அதற்கு முன்பு வரை கானா பாடல்கள் என்பது தெருவோர கூத்துகளில் மட்டுமே அதிகமாக போடப்பட்டு வந்தது.
ஆனால் தேவா சினிமாவிற்கு வந்த பிறகு இந்த கிராமிய இசையை சினிமாவிற்குள் கொண்டு வந்தார். அதே சமயம் கானாவிற்கு இணையாக மெல்லிசை இசையை வழங்க கூடியவராக தேவா இருந்தார். இந்த நிலையில் தேவா இசையமைத்த சில பாடல்கள் வேற்று மொழிகளில் இருந்து காபியடிக்கப்பட்ட பாடல் என்று அவர் மேல் அவதூறு இருந்தது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் இதற்காக விளக்கமளித்துள்ளார் இசையமைப்பாளர் தேவா. எனக்குதான் பலி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என நடக்கும். சூரியன் திரைப்படத்தில் நான் இசையமைத்தப்போது அதில் பதினெட்டு வயது இளம் கொட்டும் மனது என இசையமைத்த பாடல் கந்த சஷ்டி கவசம் பாடலின் காபி என்றார்கள்.
ஆனால் படத்தின் கதையை இயக்குனர் கூறும்போது சாந்திமுகூர்த்தம் சமயத்தில் கதாநாயகன் கதாநாயகியின் அருகில் இல்லாமல் வெளியில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடல் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் கந்த சஷ்டி கவசம் பாடலில் துவங்கி ஒரு டூயட் பாடல் வர வேண்டும் என இயக்குனர் கேட்டார்.
அதனால்தான் அப்படி நான் பாடலை வைத்தேன். ஆனால் படமாக வரும்போது அந்த முந்தைய காட்சிகளை இயக்குனர் கட் செய்து விட்டார். இதனால் நான் காபி அடித்து வைத்துவிட்டேன் என எனக்கு கெட்ட பெயர் ஆனது என விளக்குகிறார் தேவா.