சூப்பர் ஸ்டாருக்கு நிகரா விஜய்யால்தான் நடிக்க முடியும்!.. மறைமுகமாக கூறிய சுந்தர் சி!..

முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. அதற்கு பிறகு அவர் இயக்கிய காமெடி திரைப்படங்களுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் அதற்கு நடுவே அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் அவர் இயக்கினார்.

சமீப காலங்களாக அரண்மனை திரைப்படத்தின் பாகங்களை படமாக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த நிலையில் சுந்தர் சியை மரியாதை செய்யும் வகையில் சமீபத்தில் விழா ஒன்று நடந்தது. அதில் பல அரிய தகவல்களை பகிர்ந்திருந்தார் சுந்தர் சி.

sundar-c

அதில் சுந்தர் சி முன்பு இயக்கிய திரைப்படங்களில் இப்போது உள்ள நடிகர்கள் நடித்தால் யார் நடிப்பது சரியாக இருக்கும் என ஒவ்வொரு படமாக கேட்கப்பட்டது. அப்போது அன்பே சிவம் திரைப்படத்தில் கமல் மற்றும் மாதவன் கதாபாத்திரங்களுக்கு விஜய் சேதுபதியும் அசோக் செல்வனும் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.

மேட்டுக்குடி திரைப்படத்தில் பழைய கார்த்திக்கு பதிலாக சூர்யாவின் தம்பியான கார்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினார். அப்போது அருணாச்சலம் திரைப்படத்திற்கு கேட்கும்போது அதற்கு ஆப்ஷனே கிடையாது. அப்போதைய காலக்கட்டத்தில் அதற்கு ரஜினி சரியாக இருந்தார் என்றால் இப்போது விஜய் மட்டும்தான் ஒரே ஆப்ஷன் என கூறிவிட்டார் சுந்தர் சி.

அப்போது ரஜினி எப்படி சூப்பர் ஸ்டாரோ இப்போது அதே போல விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்பதைதான் சுந்தர் சி இப்படி கூறுகிராரா என இதுக்குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.