என்கிட்ட வந்து பேசாத? – சிவினுடன் சண்டையில் இறங்கிய தனலெட்சுமி!

தமிழ் பிக்பாஸில் அசிமிற்கு பிறகு அதிகமாக பிரச்சனைகளை செய்து வருபவர் தனலெட்சுமி. எதற்கெடுத்தாலும் யாரிடமாவது சண்டை செய்வதே இவரின் வேலையாக இருந்து வருகிறது.

கிட்டத்தட்ட பிக்பாஸ் வீட்டில் உள்ள முக்கால்வாசி ஆட்களுடன் ஏற்கனவே சண்டையிட்டுவிட்டார் தனலெட்சுமி. இன்றைய பிக்பாஸில் இந்த வாரத்திற்கான தலைவராக மைனா தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிலையில் சமையல் டீமில் தொடர்ந்து சிவின் இருந்து வருகிறார். இந்த வாரம் சமையல் டீமில் தனலெட்சுமி பங்கேற்கலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால் இந்த வாரமும் சிவினே சமையல் டீமிற்கு சென்றார்.

இதனால் தனலெட்சுமி மிகவும் கோபமாகிவிட்டார். இந்த நிலையில் தனலெட்சுமியை சந்தித்த சிவின். சமைக்க தெரிந்தவர்கள்தான் சமையல் டீமில் இருக்க வேண்டும். அதற்காகதான் நான் சமையல் டீமில் இருக்கிறேன் என விளக்கினார். ஆனால் எதையுமே காதில் வாங்கி கொள்ளாத தனலெட்சுமி, சிவினிடம் சண்டை போட துவங்கிவிட்டார்.

உடனே சுதாரித்துக்கொண்ட சிவின் எதுவும் பேசாமல் அமைதியாக சென்றுவிட்டார்.

Refresh