Cinema History
என்னோட ரெண்டு படத்தை காபியடிச்சுதான் அந்த தனுஷ் படத்தை எடுத்தாங்க – புகார் அளித்த கே.எஸ் ரவிக்குமார்!
கோலிவுட்டில் அதிக ஹிட் கொடுத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ் ரவிக்குமார். தமிழில் பல படங்கள் வெளிநாட்டு படங்களில் இருந்து காபி அடித்து எடுப்பதுண்டு. சிலர் உள்ளூர் படங்களையே எடுத்து அதை டிங்கரிங் செய்து தருவதும் உண்டு.

ஒரு பேட்டியில் கே.எஸ் ரவிக்குமார் இதுக்குறித்து கூறியுள்ளார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சதா, மாதவன் நடித்து வெளியான திரைப்படம் எதிரி.
இந்த படத்தில் ஒரு இளைஞனுக்காக பெண் கடத்த செல்லும் மாதவன் அதற்கு பதிலாக வேறு மணப்பெண்ணான சதாவை கடத்தி கொண்டு வந்துவிடுவார். அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் காதல் வருவதை வைத்து படம் செல்லும்.
அதே போல கே.எஸ் ரவிக்குமாரின் மின்சார கண்ணா திரைப்படத்தில் விஜய் தான் காதலிக்கும் பெண்ணை அடைவதற்காக குடும்பத்துடன் அங்கு சென்று நாடகம் நடத்துவார். இந்த இரண்டு கதையையும் காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் தான் தனுஷ் நடித்த உத்தம புத்திரன்.
இதை கே.எஸ் ரவிக்குமார் அவர்களே அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
