வெற்றிமாறனோட செல்வராகவனை கம்பேர் பண்ணாதீங்க.. கேள்விக்கு சாட்டையடி பதில் கொடுத்த தனுஷ்!..
Dhanush: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது பல நல்ல கதைகளை தேர்வு செய்து படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து வருகிறார்.
அந்த வரிசையில் நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும், பாடகராகவும் இருந்து வருகிறார். தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ், பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள், 9 விஜய் டிவி விருதுகள், 7 தென்னிந்திய ஃபிலிம் ஃபார் விருது, 5 விகடன் விருது, 5 எடிசன் விருது, 4 தேசிய திரைப்பட விருதுகள் என பல விருதுகளை இவர் வென்று இருக்கிறார்.
வெற்றிமாறனோடு செல்வராகவனை கம்பேர் பண்ணாதீங்க
ராயன் ஆடியோ லான்ச் விழாவில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனுஷ் அவர்களிடம் கேள்வி கேட்குமாறு செல்வராகவரிடம் சொல்லிய பொழுது, நான் இந்த கேள்வியை கேட்க மாட்டேன் என செல்வராகவன் கூறினார்.
அந்தக் கேள்வியில் நடிகர் தனுஷிடம் யார் உன்னை சரியாக சினிமாவில் பயன்படுத்தினார்கள் என கேட்டு அதற்கு வெற்றிமாறனா? அல்லது செல்வராகவனா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வராகவன் இந்த கேள்விக்கு எனக்கே பதில் தெரியும் என கூறி வெற்றிமாறன் தான் என கூறினார்.
அதன் பிறகு இந்த கேள்விக்கு பதில் அளித்த தனுஷ் வெற்றிமாறன் என்னை வைத்து படம் பண்ணும் பொழுது எனக்கு ஓரளவுக்கு நடிக்க தெரியும்.
ஆனால் சினிமாவில் முதன் முதலில் என்னை வைத்து நீங்கள் படம் செய்யும்பொழுது நான் வெறும் களிமண் தான். என பதிலளித்தார்