எஸ்.டி.ஆருக்காக கதையையே மாத்தின மணிரத்தினம்..! ஜெயம் ரவி கிளம்பியதால் வந்த விளைவா?

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் மணிரத்னம். மேலும் மணிரத்னம் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் பலரும் இப்போதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்சமயம் பல முக்கிய நட்சத்திரங்களை வைத்து தக் லைஃப் என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். இது இல்லாமல் முக்கிய பாத்திரத்தில் சிம்பு மற்றும் இன்னும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

முதலில் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தனர். இவர்கள் இருவருமே இதற்கு முன்பு மணிரத்தினம் திரைப்படங்களில் நடித்தவர்கள்தான். ஆனால் சில காரணங்களால் இவர்கள் இந்த படத்தில் இருந்து விலகி விட்டனர்.

Thug-life

இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் படத்திலேயே மிகவும் குறைவான சம்பளத்தைதான் வழங்கியிருந்தார் மணிரத்னம். ஆனால் இந்த திரைப்படத்தில் அதை விடவுமே குறைவான சம்பளம் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த ஜெயம் ரவி படத்தை விட்டு விலகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில்தான் சிம்பு நடிக்கிறார் என கூறப்பட்டது. உண்மையில் அப்படி இல்லை என கூறப்படுகிறது. ஜெயம் ரவி படத்தை விட்டு விலகியதுமே, ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் தொடர்பான கதாபாத்திரங்களை கதையில் இருந்தே தூக்கி விட்டாராம்.

மேலும் சிம்பு கதாபாத்திரத்தை பொறுத்தவரை அந்த கதாபாத்திரத்தை கதையிலேயே புதிதாக சேர்த்துள்ளாராம் மணிரத்னம். மேலும் இந்த படத்தில் சிம்பு கதாபாத்திரம் கமல் கதாபாத்திரத்திற்கு இணையான ஒரு கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.