எக்ஸ்ட்ரா 2 மணி நேரம் டைம் கேட்டது இதுக்குதானா!.. த்ரிஷாவை கண்ணீர் சிந்த வைத்த இயக்குனர்!.
Actress Trisha: எத்தனை திரைப்படங்களில் நடித்தாலும் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களுக்கு கிடைக்கும் ஆதரவு எப்போதும் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. ஏனெனில் திரைப்படம் முழுக்க கதாநாயகர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை செல்லும்.
ஏதோ காதல் காட்சிகள் வைக்க வேண்டும் என்பதற்காக கதாநாயகிகளை படத்தில் வைத்திருப்பார்கள். அதனால்தான் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள் காதல் தொடர்பான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில் காதல் கதைகளை பொறுத்தவரை கண்டிப்பாக கதாநாயகனுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் கதாநாயகிக்கும் இருக்கும்.
உதாரணமாக கில்லி, நீதானே என் பொன்வசந்தம், வல்லவன் போன்ற திரைப்படங்களை கூறலாம். அப்படி த்ரிஷாவிற்கு பெயர் சொல்லும் படமாக அமைந்த திரைப்படம் 96. எல்லா காலக்கட்டங்களிலும் காதல் தோல்வியை சந்தித்தவர்கள் இங்கு இருக்கதான் செய்கிறார்கள்.
த்ரிஷாவிற்கு கூறிய கதை:
அவர்கள் அனைவரும் உருகி பார்க்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 96. இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் த்ரிஷாவை நேரில் சந்தித்து கூறுவதற்காக சென்றிருந்தார். அப்போது நடந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
பெரும் கதாநாயகர்களை போலவே த்ரிஷாவும் வெகு நேரம் ஆனாலும் கூட அமர்ந்து கதையை கேட்க கூடியவர். அந்த வகையில் 96 படத்தின் இயக்குனர் ப்ரேம் குமார் த்ரிஷாவிடம் கதையை கூற சென்றப்போது அவரை யார் என்றே த்ரிஷாவிற்கு தெரியாது.
இந்த நிலையில் அங்கு அவர் வந்ததும் முழுக்கதையை எல்லாம் கூற வேண்டாம். ஒரு 20 நிமிடத்தை மட்டும் கூறுங்கள் என கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த இயக்குனர் இல்லை மேடம் என்னால் அப்படியெல்லாம் கதை சொல்ல முடியாது. எனக்கு ஒரு 2 மணி நேரம் கொடுங்கள் முழு கதையையும் கூறி விடுகிறேன என கூறியுள்ளார்.
அதற்கு த்ரிஷா ஒப்புக்கொள்ளவே கதையை கூற துவங்கியுள்ளார் ப்ரேம் குமார். கதையை கேட்டு முடித்ததுமே கண்ணீர் விட்டு அழுது விட்டாராம் த்ரிஷா. உடனே இந்த கதையில் நடிப்பதற்கும் அவர் ஒப்புக்கொண்டார்.