News
உண்மையில் நான் ஒரு தீவிர இந்து – கருத்து தெரிவித்த இயக்குனர் ராஜ மெளலி
தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராக இருப்பவர் ராஜ மெளலி. ராஜ மெளலி இயக்கினாலே அந்த படம் ஹிட்தான் என்கிற பேச்சு மக்களிடையே உண்டு.
ராஜ மெளலியும் கூட அவர் இயக்கிய அனைத்து படங்களிலுமே ஹிட் கொடுத்துள்ளார். அதிலும் தற்சமயம் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 1000 கோடிக்கு அதிகமாக ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக மகாபாரத கதையை இவர் திரைப்படமாக எடுக்க உள்ளார் என்கிற செய்தியும் உலாவி வருகிறது.

இந்நிலையில் ராஜ மெளலி எப்போதும் இந்து மத புராண இதிகாசங்களை அடிப்படையாக கொண்டே தனது கதைகளை வடிவமைக்கிறார். இதனால் அவரது திரைப்படங்களில் இந்து மதம் தொடர்பான குறியீடுகள், வழக்கங்கள் என பலவற்றை பார்க்க முடிகிறது என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
எனவே இதுக்குறித்து ராஜ மெளலி கூறும்போது இந்து தர்மத்தை நான் ஏற்கிறேன். ஏனெனில் இந்து தர்மம் என்பதை ஒரு மதத்திற்குள் அடக்க முடியாது. அது ஒரு வாழ்க்கை முறை, அது ஒரு வாழ்க்கை தத்துவம். ஒரு மதமாக பார்த்தால் நான் என்னை இந்து என்று சொல்லிக்கொள்ள மாடேன்.
ஆனால் இந்து மதத்தை ஒரு தர்மம் என்கிற கண்ணோட்டத்தில் பார்த்தால் நான் கண்டிப்பாக ஒரு தீவிர இந்துதான். ஏனெனில் நான் மிகவும் தீவிரமாக அந்த தர்மத்தை பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
