லோகேஷ் மாதிரி ஷங்கர் போட்ட மல்டிவெர்ஸ் ஸ்டோரி.. ரஜினி,அர்ஜுன், கமல் மூணு பேருமா.. ரைட்டு!.

வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான பிரமாண்ட இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளிவரும் பெரும்பான்மையான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவை.

ஆனால் 2.0 திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக ஷங்கர் இயக்கத்தில் திரைப்படங்களே வரவில்லை. அடுத்து இந்தியன் 2 நாளை வெளி வர இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் போலவே தனக்கு தோன்றிய மல்டிவெர்ஸ் கதை குறித்து ஷங்கர் பேசியிருந்தார்.

மல்டிவெர்ஸ் படங்கள்:

director shankar

ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் என்கிற கதை மல்டிவெர்ஸ் கான்செப்டில் வந்த பிரபலமான திரைப்படமாகும். வெவ்வேறு திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை ஒன்றினைத்து ஒரு திரைப்படமாக செய்வதைதான் மல்டிவெர்ஸ் என அழைப்பார்கள்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜும் இந்த மல்டிவெர்ஸ் முறையில் தற்சமயம் திரைப்படங்களை எடுத்து வருகிறார். ஆனால் இதற்கு முன்பே தனக்கு இந்த கதை தோன்றியதாக இயக்குனர் ஷங்கர் கூறுகிறார். இந்தியன் படத்தில் வரும் சேனாபதி கமல், முதல்வன் படத்தில் வரும் ஒரு நாள் முதல்வர், சிவாஜி படத்தில் வரும் ரஜினி

ஷங்கர் விட்ட கதை:

director shankar

இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து வருவது போல ஒரு கதையை யோசித்தேன். பிறகு அது எனக்கு காமெடியாக தோன்றியதால் விட்டுவிட்டேன். ஆனால் இப்போது அதற்காக வருத்தப்படுகிறேன் என்கிறார் இயக்குனர் ஷங்கர்.

எனவே நான் உதவி இயக்குனர்களுக்கு எல்லாம் கூறும் அறிவுரை என்னவென்றால் தயவு செய்து உங்களிடம் ஒரு சிறப்பாக கதை ஐடியா வந்தால் அதை திரைப்படமாக்கிவிடுங்கள் என கூறுகிறார் இயக்குனர் ஷங்கர்.