Latest News
சுதா கொங்கராவின் அடுத்த படம் களத்தில் இறங்க இறக்கும் விஜய் மகன்!
இயக்குனர் சுதா கொங்கரா மிகவும் பிரபலமான இயக்குனர் ஆவார். தமிழில் இறுதி சுற்று, சூரரை போற்று போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழில் இவர் இயக்கும் படங்கள் பெரும்பாலும் ஹிட் அடித்து விடுகிறது. இதனால் சுதா கொங்கரா இயக்குகிறார் என்றாலே அந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.
எப்போதும் இயக்குனர்கள் ஒரு கதையை எழுதிவிட்டு அதற்கு எந்த கதாநாயகர்கள் கிடைக்கிறார்களோ அவர்களை வைத்து திரைப்படத்தை எடுத்துவிடுவார்கள். ஆனால் சுதா கொங்கரா, அவர் எழுதும் கதைகளுக்கு தகுந்த கதாநாயகர்களை அவரேதான் தேர்ந்தெடுக்கிறார்.
ஏற்கனவே ரத்தன் டாடாவின் கதையை திரைப்படமாக்கலாம் என முடிவு செய்துள்ளார் சுதா கொங்கரா. இதற்காக நடிகர் சூர்யாவிடம் பேச்சு வார்த்தை சென்றுக்கொண்டுள்ளது. தற்சமயம் மற்றுமொரு கதையை சுதா கொங்கரா எழுதி வருகிறார்.
இந்த கதை விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய்க்கு பொருந்தும் என அவர் நினைக்கிறார். எனவே இதுக்குறித்து ஜேசன் விஜய்யிடம் பேசியுள்ளார் சுதா கொங்கரா. ஆனால் ஜேசன் விஜய்க்கு இயக்குனர் ஆக வேண்டும் என்றுதான் ஆசையாம். எனவே அவர் தற்சமயம் நடிப்பதாக இல்லை என தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அவர் சம்மதிக்கும் பட்சத்தில் அவரை வைத்தே படத்தை எடுக்கலாம் என முடிவு செய்து காத்துள்ளாராம் சுதா கொங்கரா.